கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் அபார்ட்மெண்டில் போலீசார் நடத்திய ரைடில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட நான்கு பேர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அருகே சரவணம்பட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் விபச்சாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பல நாட்களாக நோட்டமிட்ட பின்பு காவலர்கள் மப்டியில் அங்கு சென்றுள்ளனர்.

அங்கு இரண்டு இளைஞர்கள், 22 வயது பெங்களூரை சேர்ந்த இளம்பெண் மற்றும் 37 வயதான தமிழகத்து பெண்ணைக் கொண்டு விபச்சார வியாபாரத்தில் ஈடுப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த குப்தீஸ்வரன் மற்றும் விருதுநகரை சேர்ந்த மகேந்திரன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களை கைது செய்து போலீசார் நடந்திய விசாரணையில் சிக்கந்தர் பாஷா என்பவர் இவர்களை இயக்கியது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள சிக்கந்தர் பாஷாவை போலீசார் தேடி வருகின்றனர்.