மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

அதிக விலைக்கு முகக்கவசம் விற்பனை.. அப்பல்லோ மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்ற அப்பல்லோ மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

apollo pharmacy seal

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் 80 நகரங்களை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வர உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களுக்கு தடை இருக்காது என்று அறிவிக்கப்பட்டாலும் கூட, அவசர கதியில் பொருட்களை மக்கள் வாங்கி குவித்து வருகின்றனர். கொரோனா தொற்று பாதித்துவிடுமோ என்ற பயத்தில் பலரும் முகக்கவசங்ள் மற்றும் சானிடைசர்களை வாங்கி வருகின்றனர். இதனால் முன்பை விட இந்த பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

corona-virus-09

உதாரணமாக இதற்கு முன்பு, 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட இரண்டடுக்கு முகக்கவசத்தின் விலை தற்போது 30 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட மூன்றடுக்கு முகக்கவசம் தற்போது 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு ரூ.150-க்கு விற்கப்பட்ட எண் 95 வகை முகக்கவசம், தற்போது ரூ.300-க்கு விற்கப்படுகிறது.

இந்த நிலையில் முகக்கவசம், சானிடைசர்களுக்கு அதிகபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயித்தது. அதன்படி 200 மி.லி கொண்ட சானிடைசர் பாட்டில் ரூ.100 என்றும், சர்ஜிக்கல் முகக்கவசம் ஒன்று ரூ. 10-க்கும், சாதாரண முகக்கவசம் ரூ.8-க்கும் விற்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் திருப்பத்தூரில் உள்ள அப்பல்லோ மருந்தகம் ஒன்றில் அரசு நிர்ணயித்த விலையை மீறி முகக்கவசம் விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், அப்பல்லோ மருந்தகத்திற்கு சீல் வைத்தனர்.

1newsnationuser1

Next Post

144 தடை உத்தரவு எதிரொலி.. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்.. சென்னை பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்..

Mon Mar 23 , 2020
தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளதால் சென்னை பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில் இன்று மிகமுக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் “ […]
chennai bus crowd

You May Like