’மக்களே அபராதம் செலுத்த தயாரா’..? அப்படினா இனியாவது கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க..!!

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத் தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சிக் கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டப்படி, நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ, அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை அமைக்கவோ கூடாது. அதன் அடிப்படையில், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சிப் பணியாளர்களால் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜன. 11ஆம் தேதி முதல் பிப்.1ஆம் தேதி வரை, மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய 340 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இந்திய வரைபடத்தை காலில் போட்டு மிதிக்கும் நடிகர் அக்‌ஷய் குமார்..!! வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!!

Tue Feb 7 , 2023
பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அக்‌ஷய் குமார். இவர் இம்ரான் ஹாஸ்மியுடன் இணைந்து நடித்துள்ள செல்ஃபி திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், அக்‌ஷய் குமார் வடக்கு அமெரிக்காவில் மார்ச் மாதம் சுற்றுலா செல்வதற்காக எடுக்கப்பட்ட விளம்பர வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த […]
இந்திய வரைபடத்தை காலில் போட்டு மிதிக்கும் நடிகர் அக்‌ஷய் குமார்..!! வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!!

You May Like