தினமும் இளநீர் குடிப்பவரா நீங்கள்?…. ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்!

நாள்தோறும் இளநீர் அருந்துவதால், நாம் ஆரோக்கிய பிரச்சனைகள சந்திக்க வாய்ப்புள்ளது. அதன்படி, இளநீர் குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவநிலைகளிலும் மக்கள் இளநீர் அருந்துகின்றனர். ஏனென்றால், இயற்கை பானங்களிலேயே இளநீரில் தான் கலப்படம் செய்யவே முடியாது. இளநீர் ஒருவரது தாகத்தை தணிப்பதோடு, உடல் சூட்டைக் குறைக்கிறது மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகிறது. இந்தநிலையில், இளநீரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது.. இளநீரில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளன. எனவே ஒருவர் இளநீரை அதிகம் குடிக்கும் போது, அந்நபரின் உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து, எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை ஏற்படுத்தி, கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை வரவழைத்துவிடும்.

உடலுக்குத் தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மினரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன. பழங்களை விட கலோரிகள் அதிகளவில் உள்ளதால் எடையைக் குறைக்கும் டயட்டில் இப்பவர்கள் அதிகமாக இளநீரைக் குடிக்காதீர்கள். இளநீரில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளன. எனவே ஒருவர் இளநீரை அதிகம் குடிக்கும் போது, அந்நபரின் உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து, எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை ஏற்படுத்தி, கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை வரவழைத்துவிடும். கடுமையான உடற்பயிற்சி செய்து முடித்த பின் உடலானது வறட்சியடைந்து இருக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே இளநீரைக் குடிக்கக் கூடாது.

இளநீரில் சர்க்கரை குறைவாக இருக்கலாம். ஆனால் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இவை இரண்டும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் ஆபத்தானது. ஏனென்றால், இரத்த அழுத்தத்தை அளவுக்கு அதிகமாக குறைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

Kokila

Next Post

WiFi பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா?.... கண்டுபிடிக்க சுலபமான வழி இதோ!

Fri Feb 10 , 2023
நாம் பயன்படுத்தும் கணினி போன்ற சாதனங்களில் வைஃபை பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அதனை எப்படி மீட்டெடுப்பது குறித்து சில வழிகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. உங்கள் கணினி, ஸ்மார்ட்போன் போன்ற கேட்ஜெட்டுகளில், அலுவகம் அல்லது வீட்டில் ஒரு வைஃபை நெட்வொர்க்குடன் ஒருமுறை இணைத்துவிட்டால், கடவுச்சொல்லை மாற்றாதவரை, அந்த நெட்வொர்க்குடன் மீண்டும் இணைப்பது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. […]

You May Like