பதற்றப்படுபவரா நீங்கள்?… இனிமேல் இதை குடிக்காதீங்க!… கருச்சிதைவு ஏற்படும் அபாயம்!

மன அழுத்தத்தை குறைக்க உதவும் க்ரீன் டீயில் உள்ள நன்மைகள் ஏராளம். இருப்பினும், சில உடல்நல தீங்குகளும் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாக உள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்கிறது, புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தருகிறது. உடல் எடையை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிற்து கிரீன் டீ. இருப்பினும், கிரீன் டீ குடிப்பதால் சிலருக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. அந்தவகையில் யாரெல்லாம் க்ரீன் டீயை குடிக்கலாம் என்று குடிக்கக்கூடாது என்று அறிந்துகொள்வோம். க்ரீன் டீயில் காஃபின் இருப்பதால் அதிகமாக பதற்றத்தை உண்டாக்கும் . இதயத் துடிப்பு வேகமாக இருக்கும், தூக்கமின்மை பிரச்னை ஏற்படும். ஆகையால் அதிக பதற்றம் கொள்ளும் இயல்பு உள்ளவர்கள் முற்றிலும் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கலாம்.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் க்ரீன் டீயை உட்கொள்ள வேண்டாம். அது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும். நீங்கள் ஏற்கனவே இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாலும், க்ரீன் டீயை உட்கொள்வது அதன் உறிஞ்சுதலை மேலும் குறைக்கும் என்பதாலும், பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம். க்ரீன் டீயில் உள்ள டானின்கள் வயிற்றில் அமிலத்தை அதிகரித்து வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வாந்தியை உண்டாக்கும். அல்சர் அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். வயிறு காலியாக இருக்கும்போது கிரீன் டீ குடிக்கக்கூடாது.

காஃபின், கேட்டசின்கள் மற்றும் டானின்கள் உள்ள கிரீன் டீயில், கர்ப்பத்தின் அபாயத்தை அதிகரிக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது பாலூட்டும் தாயாக இருந்தால், ​​ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ-க்கு மேல் குடிப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். கருச்சிதைவு ஏற்படும் அபாயமும் ஏற்படலாம். அதே சமயம் பாலுடன் சேர்ந்து காஃபின் உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும். நாள் முழுவதும் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் கிரீன் டீ உட்கொண்டால், அது உங்கள் தலைவலியை அதிகரிக்கும்.

Kokila

Next Post

அட இதுல இவ்வளவு விஷயம் இருக்கா!... மல்லிகைப்பூவின் மருத்துவ குணங்கள் ஏராளம்! இப்படி ட்ரை பண்ணுங்க!

Thu Feb 16 , 2023
மணக்கும் மல்லிகைப் பூவின் பயன்கள் என்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். மல்லிகை பூக்கள் மத மற்றும் திருமண விழாக்களின் ஒரு பகுதியாகும். அதை தலையில் சூடிக்கொள்ளவும், தெய்வ வழிபாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மல்லிகையின் இலை, பூ, வேர் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, ஒரு துணியில் கட்டி, வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.மல்லிகை பூவை கொதிக்க வைத்து தேன் […]

You May Like