நைட் ஷிப்ட் பணியில் இவ்வளவு ஆபத்தா?… ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!…

நைட் ஷிப்டுகளில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் சாப்பிடும் போது பதட்டம், மனச்சோர்வு, மனநலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்திற்கேற்ப தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் ஆண், பெண் என இருபாலரும் இரவு பகல் பாராமல் உழைத்துவருகின்றனர். இதிலும் மருத்துவம், காவல்துறை, சாப்ட்வேர், கால்சென்டர் போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இரவிலும் பணியாற்ற வேண்டியதிருக்கிறது. இரவில் விழித்திருந்து வேலை செய்துவிட்டு, பகலில் அவர்கள் தூங்கும் சூழ்நிலை உருவாகிறது. இரவில் விழித்திருப்பதும், பகலில் தூங்குவதும் இயற்கையான உடல் இயக்க நிலையை தடம் புரளச்செய்து, நோய்களை உருவாக்குகிறது. இரவுப் பணிக்காக முரண்பாடான நேரங்களில் உணவு சாப்பிடுவது, வெகு நேரம் உட்கார்ந்தே வேலைபார்ப்பது போன்றவைகளும் உடலுக்கு கூடுதல் பிரச்சினைகளை தரும். இவர்களுக்கு மற்றவர்களைவிட மனஅழுத்தமும் அதிகரிக்கும்.

நைட் ஷிப்ட் அல்லது சுழற்சி ஷிப்ட் முறையில் வேலை செய்பவர்களுக்கு இதய -ரத்த நாள நோய், புற்றுநோய், உடல் பருமன், நீரழிவு, சர்க்கரை, மனசோர்வு, தீவிர ஜீரண கோளாறு, குழந்தையின்மை பிரச்சனை, ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும், பெரும்பாலோனோருக்கு குளிர்சாதன அறையில் வேலை இருப்பதால், உடலுக்குத் தேவையான சூரிய ஒளி கிடைக்காமல் ‘வைட்டமின் டி’ போன்ற ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

இரவு நேர பணியின் போது தூக்கம் வரக்கூடாது என்பதற்காக வேலைக்கு நடுவில் லேட் நைட் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும் இனிமேலாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் ஆசிரிய உறுப்பினரும், ஊட்டச்சத்து மனநல மருத்துவத்தில் நிபுணருமான டாக்டர் உமா நைடூ தெரிவித்துள்ள தகவலின் படி, பொதுவாக தூக்கம் இல்லாமல் இருந்தாலே பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். அதுவும் இரவு நேர பணியின் போது தூக்கத்தைக் கலைக்க வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாமல் சாப்பிடுவதால் பதட்டம், மனச்சோர்வு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆய்வை நடத்துவதற்காக, 19 பெரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 28 மணி நேர சுழற்சி (பகல் மற்றும் இரவு உட்பட) அல்லது 24 மணி நேர சுழற்சியின் (பகலில் மட்டும்) உணவு உட்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் படி பகல் நேரத்தில் உணவு உண்ணும் இரவு ஷிப்ட் தொழிலாளர்களில் மனநிலை பாதிப்பு அல்லது மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றின் அதிகரிப்பு காணப்படவில்லை. அதே சமயம் இரவு நேரத்தில் சாப்பிடும் போது பதட்டம், மனச்சோர்வு, மனநலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நைட் ஷிப்ட்டில் வேலை செய்பவர்களின் அறையில் போதுமான அளவில் வெளிச்சம் இருக்கவேண்டும். வெளிச்சம், தூக்கத்திற்கான ஹார்மோனான மெலட்டோனின் உற்பத்தியை குறைத்து விழிப்பு நிலையை உருவாக்கும். இரவில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது தூக்க கலக்கம் ஏற்பட்டால், அப்போது சிறிது நேரம் வேலையை நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் நடக்கவோ, சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவோ செய்யலாம். வாய்ப்பிருந் தால் அரை மணி நேரம் தூங்கிவிட்டு பணியை தொடரலாம்.

தூக்க கலக்கம் ஏற்படும்போது காபி பருகுவது தற்காலிகமாக உற்சாகத்தை தரும். ஆனால் நீண்ட நேரம் தூக்கத்தை விரட்ட காபியால் முடியாது. காபி அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை உயர்த்தும். மட்டுமின்றி பகல் நேர தூக்கத்தின் அளவையும் அதிகரிக்கும். அதனால் இரவுப்பணி செய்பவர்கள் காபி, டீ போன்றவைகளின் பயன்பாட்டை வெகுவாக குறைத்திடவேண்டும். அவர்கள் அதிக அளவு தண்ணீர் பருகவேண்டும். பழம், ஜூஸ் போன்றவைகளை எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் பலகாரங் கள் சாப்பிடுவதையும் தவிர்க்கவேண்டும். எப்போதுமே நள்ளிரவுக்கு பின்பு வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஓமத்தில் ஒளிந்திருக்கும் மருத்துவ பயன்கள்!... தினமும் காலையில் இப்படி செய்துபாருங்க!...

Sun Feb 19 , 2023
நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஓமம் ஒரு சிறப்பான மூலிகையாகும். பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை ஓமத்தை பயன்படுத்தலாம். இதில், அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்வோம் ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. குழந்தைகள் பிறந்தால் ஓமநீர் உள்ளுக்கு தருவார்கள் அது குழந்தைகளின் வாயு உபாதை, செரியாமை […]

You May Like