ரூ.2,000-க்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவரா நீங்கள்..? தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி முடிவு..!!

மின்துறை அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக குறைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் வழியாகவும், இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமின்றி நேரடியாக மின் துறை அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்வாரிய அலுவலகங்களில் பணி சுமையை குறைப்பதற்காக, மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்களால் கட்டக்கூடிய அதிகபட்ச கட்டணம் என்பது 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.2,000-க்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவரா நீங்கள்..? தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி முடிவு..!!

இதற்கான பரிந்துரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, மின்சார வாரியம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் விரைவில் மின்வாரிய அலுவலகங்களில் செலுத்தப்படக்கூடிய அதிகபட்ச கட்டணம் 2 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படும்.

Chella

Next Post

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 116 ரூபாய் 50 பைசா விலை குறைப்பு.!

Tue Nov 1 , 2022
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறிய நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.ஆனால், தற்போது வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயுவின் விலை குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் சிலிண்டர் ரூபாய் 2009 க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்சமயம் வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் 116 ரூபாய் 50 பைசா விலை குறைத்துள்ளது. எனவே, தற்போது வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 1893க்கு விற்பனையாகின்றது. […]

You May Like