SBI வாடிக்கையாளரா நீங்கள்..? புதிய செயலி அறிமுகம்! பயன்படுத்துவது எப்படி?

ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இணைய வங்கி தொடர்பான பரிவர்த்தனைகள்/செயல்பாடுகளுக்கு OTP-ஐ உருவாக்க Secure OTP என்ற புதிய செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி விளங்கிவருகிறது. இந்நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய செயலி ஒன்றை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் இனி இன்டர்நெட் பேங்கிங், ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த எஸ்எம்எஸ் மூலம் OTP பெறாமல், தனி செயலி மூலம் அதனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலி Android மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

SBI Secure OTP செயலியை பயன்படுத்தும் முறை பின்வருமாறு: Online SBI-இல் உள்நுழைந்து, சுயவிவரப் பகுதிக்குச் சென்று, பாதுகாப்பான OTP இணைப்பைச் செயல்படுத்தவும். இதையடுத்து, பெறப்பட்ட ஆக்டிவேஷன் கோடை உள்ளிடவும். சரிபார்த்த பிறகு, Secure OTP செயலி பயனர் பதிவு நிறைவு செய்யப்படும். மேலும், இன்டர்நெட் பேங்கிங்/YONO LITE ஆப்பிற்கான OTP அங்கீகார முறையானது, SBI Secure OTP செயலிக்கு மாற்றப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். இதன்மூலம், இனி வாடிக்கையாளர் எஸ்எம்எஸ் மூலம் OTP பெறமாட்டார்.

மேலும், MPIN-ஐ பயன்படுத்தி SBI Secure OTP செயலியில் உள்நுழைந்து, வாடிக்கையாளர்களை பதிவு செய்யும்போது பயன்படுத்திய பாதுகாப்பான OTP-ஐ உருவாக்க அதே சிம் இடத்தில் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. மொபைலில் உள்ள செயலியில் பதிவு செய்தவுடன், OTP-ஐ உருவாக்க அதே மொபைலை பயன்படுத்த வேண்டும் என்றும் இதற்கிடையில், நீங்கள் வேறொரு மொபைலில் இருந்து பதிவு செய்ய விரும்பினால், அதே சிம்மை புதிய கைபேசியில் இணைக்கவும்.

Kokila

Next Post

அசத்தல்...! பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவி தொகை இரண்டாம் கட்ட திட்டம்...! இன்று தொடக்கம்... எப்படி விண்ணப்பிப்பது...?

Wed Feb 8 , 2023
“புதுமைப் பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் , அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், […]

You May Like