மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

டெல்லியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்…

டெல்லியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

202003310526334503 Tamil News Around 200 suspected for coronavirus at Nizamuddin Mosque SECVPF

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், தலைநகர் டெல்லியின் நிசாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான வெளிநாட்டினரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

202003310526334503 1 coronadelhi3. L styvpf


இதற்கிடையே, இஸ்லாமிய மத நிகழ்ச்சியில் பங்கேற்று காஷ்மீர் திரும்பிய நபர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். அதேபோல், மத நிகழ்ச்சியில் பங்கேற்று தெலுங்கானா திரும்பியவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்தும் பலர் டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களது தகவல்களை திரட்டும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும் மசூதிக்குள் தங்கியிருந்த 200-க்கும் அதிகமானோர் இருமல், காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.


இதையடுத்து, மசூதிக்குள் இருந்த அனைவரையும் அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தி கொரோனா பரிசோதனைக்க்கு உள்படுத்தியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் இன்று அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மசூதி இருந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கிடையே, இஸ்லாமிய மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

28 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி...

Tue Mar 31 , 2020
திருவண்ணாமலையில் 28 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் அறிகுறி தெரிந்தால் வீட்டிலேயே தனிமை படுத்திகொள்ள அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரை அடுத்த வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இளைஞர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும், இவர் […]
கொரோனா

You May Like