நியூஸ் க்ளிக் இணையதள நிறுவனர் கைது சட்டவிரோதம்! – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் பிரபீர் புரகாயஸ்தாவின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவித்து கைது நடவடிக்கையை ரத்து செய்து விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து பணம் பெற்றதாகப் புகார் எழுந்ததால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களிலும் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பத்திரிகையாளர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

அத்துடன் நியூஸ் க்ளிக்  செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிர்பீர் புர்காயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தை சேர்ந்த அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தேசத்துரோக வழக்கான “ஊபா” (UAPA)-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன. இந்த நடவடிக்கைக்கு “இந்தியா” கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே தமது கைது நடவடிக்கைக்கு எதிராக பிர்பீர் புர்காயஸ்தா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிர்பீர் புர்காயஸ்தாவை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை உடனே விடுதலை செய்ய அதிரடியாக உத்தரவிட்டது. 

Next Post

சொர்க்க வாசலுக்கு 999 படிக்கட்டுகள்..!! 5,000 அடி உயரம்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

Wed May 15 , 2024
பொதுவாகவே அனைவருக்கும் நான் இறந்தால் சொர்க்கத்திற்கு தான் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், சொர்க்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் மகிழ்ச்சியளிக்கும் தருணத்தை அனைவருக்கும் வழங்கும் என பலராலும் நம்பப்படுகிறது. அப்படி உலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மக்கள் சொர்க்கத்தின் வாசல் என்று சொல்கின்றனர். அந்தவகையில், சீனாவில் இருக்கும் ஒரு இடத்தை சொர்க்கத்தின் வாசல் என மக்கள் அழைக்கின்றனர். சீனாவின் ஹுனான் […]

You May Like