கள்ளக்காதலி மீதான மோகம் குறைந்ததால், கர்ப்பிணியான அவரை, காதலன் அடித்தேக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் பர்தோலி நகரில் வசிக்கும் ரஷ்மி கட்டாரியா என்ற 25 வயது பெண் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த ஐந்து ஆண்டுகளாக சிராக் படேல் என்ற நபருடன் கள்ள உறவில் வாழ்ந்து வந்துள்ளார். இதனால், ரஷ்மிக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில், ரஷ்மி மீண்டும் கர்ப்பமானார்.

ஏற்கனவே திருமணமான சிராக் படேலுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஏற்கனவே முதல் குழந்தை பிறந்த போதே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. அப்போதே அவருக்கு கள்ளக்காதலி மீதான மோகம் குறைந்துள்ளது. அப்போது முதலே அவரை கழட்டி விட திட்டமிட்டிருந்தார் சிராக் படேல். ஆனால், அதற்குள் அடுத்த குழந்தையும் உருவானதால் என்ன செய்வதென்று விழித்தார்.

இந்நிலையில், கள்ளக்காதலியை கொலை செய்ய திட்டமிட்ட சீராக் படேல், கடந்த வாரம் அவரை அடித்தே கொலை செய்துள்ளார். பின்னர் அவரின் சடலத்தை ஒரு பண்ணை நிலத்தில் புதைத்து விட்டு, குழந்தையை அவரின் பெற்றோர் வீட்டின் வாசலில் போட்டு விட்டு ஓடி விட்டார். தங்கள் மகளின் குழந்தை அனாதையாக வீட்டு வாசலில் கிடப்பதை பார்த்த அவரின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலில் ரஷ்மியை கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிராக் படேலை விசாரித்து வருகின்றனர்.