AstraZeneca | தவறான தகவல்களால் சிதைக்கப்பட்ட கோவிட்-19 உயிர்காப்பான்.!!

AstraZeneca: கொரோனா நோயால் உலகமே அச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கோவிட்-19 நோய்க்கு எதிரான முதல் தடுப்பூசியான அஸ்ட்ராஜெனெகா ஜனவரி 4-ஆம் தேதி 2021 ஆம் வருடம் பரிசோதனையாக முதல் நபருக்கு செலுத்தப்பட்டது. கோவில் என்னும் உயிர் கொல்லி நோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி மனித குலத்தால் புகழப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2.5 பில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, மேலும் 6.3 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

கொரோனா காலகட்டத்தில் உயிரை காப்பாற்றும் மீட்பராக கருதப்பட்ட அஸ்ட்ராஜெனெகா 2024 ஆம் ஆண்டில் உயிரை குடிக்கும் பாவியாக பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசியால் ரத்த உறைவு மற்றும் ரத்தத்தில் பிளேட்லெட் செல்களின் குறைவு போன்ற பக்க விளைவுகள் இருப்பதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஒப்புக்கொண்டது. மேலும் மிகவும் அரிதான நிகழ்வுகளில் மட்டுமே இந்தப் பக்க விளைவுகள் ஏற்படுவதாக Astra Zeneca குறிப்பிட்டது. மற்ற தடுப்பூசிகளாலும் இந்த பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கோவிட்-19 தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சனிலும் ரத்த உறைவு ஏற்படுவதாக அறியப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸில் பல வகைகள் தோன்றி இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு, அஸ்ட்ராஜெனெகா அதன் தடுப்பூசியான Vaxzevria ஐ உலகளாவிய சந்தைகளில் இருந்து திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து உலக அளவில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் முன்வைக்கப்பட்டது. எனினும் இந்த சூழலை ஆராய்ச்சியாளர்கள் வேறு விதமாக அணுகுகின்றனர்.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவ ஆய்வுகளின் பேராசிரியர் ஆடம் ஃபின் கூறுகையில் ” உலக அளவில் தடுப்பூசிகளுக்கான தேவை இப்போது மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் தேவையை விட விநியோகம் அதிகமாக இருக்கிறது. மிகவும் அதிகமாகவும் இருந்தது. வரையறுக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, அசல் வோஹான் ஸ்பைக் புரதத்தை வெளிப்படுத்துகிறது. இது தற்போது வரை புதுப்பிக்கப்படவில்லை. இப்போது புழக்கத்தில் உள்ள SARS-CoV2 வைரசுக்கு எதிராக அஸ்ட்ராஜெனெகா குறைந்த செயல் திறன் கொண்டதாக இருக்கிறது.

தடுப்பூசி மற்றும் மக்களின் நோய் தொற்றிலிருந்து புதிய வைரஸ் உருவாகி இருப்பதால்வைரஸ் உருவாகியிருப்பதால், தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் விநியோகத்தைத் தொடர்வதற்கான வணிக வழக்கு ஏதும் இல்லை. இதன் காரணமாகவே அந்த நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தி இருக்கலாம் என தெரிவித்திருக்கிறார்.

லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் ட்ராபிகல் மெடிசின் துணை இயக்குநரும், மூலக்கூறு வைராலஜி பேராசிரியருமான ஜொனாதன் பால் கூறுகையில் ” ஒரு பயனுள்ள கோவிட்-19 தடுப்பூசிக்காக நாம் அனைவரும் காத்துக் கொண்டிருந்தோம் என்பதை மறந்து விட்டோம். மேலும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது. நாம் செய்யும் அனைத்து விஷயங்களிலும் நன்மைகளும் தீமைகளும் இருக்கிறது. மேலும் தொற்றுநோயின் உச்சத்தில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தீங்கை விட அதிக நன்மையை ஏற்படுத்தியது. அந்த நன்மை இன்னும் இருக்கிறது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. அந்தத் தடுப்பூசியை விட வீரியமிக்க தடுப்பூசிகள் வந்து விட்டன என தெரிவித்தார்.

அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் தயாரித்து வெளியிட்ட கோவிட் ஷீல்ட் தடுப்பூசி கொரோனா நோய் உச்சகட்டத்தில் இருந்தபோது பல கோடி கணக்கான மக்களின் உயிர்காக்க உதவியது என்பதில் சந்தேகம் இல்லை. 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் டெல்டாவாக உருமாறிய கோவிட்-19 வைரஸின் பாதிப்பிலிருந்து மக்களை காக்கவும் இது உதவியது. உலகளாவிய விநியோக சிக்கல்களுக்கு மத்தியில் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க உதவும் சில கருவிகளில் இந்தத் தடுப்பூசியும் ஒன்று.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, ஃபைசர், நோவாக்ஸ் மற்றும் மாடர்னா போன்றவற்றைப் போலவே கோவிட்-19 பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்ட நேரத்தில் 3 கட்ட சோதனைகளை முடித்து பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என காட்டியது. இந்தியாவில், டெல்டா மாறுபாட்டின் உச்சக்கட்ட காலத்தில், தீவிர உலகளாவிய பற்றாக்குறை மற்றும் மிக அதிகமான கோவிட் இறப்புகள் மற்றும் சுமைகளின் போது, ​​சீரம் இன்ஸ்டிட்யூட் இந்த தடுப்பூசியின் முக்கிய தயாரிப்பாளராக இருந்தது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது.

ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகளை பொருத்தவரை கோவிட் வைரஸ் இரத்த உறைவு மற்றும் த்ரோம்போசைட்டோபீனியா போன்றவற்றை உருவாக்கும் என்பது நன்கு நிறுவப்பட்ட உண்மையாகும். இங்கிலாந்தில் தடுப்பூசி போடப்பட்ட 30 மில்லியன் நோயாளிகளின் ஆகஸ்ட் 2021 பகுப்பாய்வில், கோவிட் தொடர்பான தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, ​​கோவிட் தொற்றுக்குப் பிறகு த்ரோம்போசைட்டோபெனிக் நிகழ்வுகளின் ஆபத்து மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடப்படும் ஒவ்வொரு 10 மில்லியன் மக்களில் 66 பேருக்கு இரத்தக் கட்டிகளும் 7 பேருக்கு மூளையில் அரிய வகை ரத்தக் கட்டிகளும் ஏற்படுவதாக பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் விவரிக்கிறது. கோவிட் தொற்று நரம்புகளில் 12,614 இரத்தக் கட்டிகளையும், 20 அரிதான இரத்தக் கட்டிகளை மூளையில் ஏற்படுத்துகிறது.

இந்த தடுப்பூசி ஏற்படுத்தும் ரத்த உறைவு மற்ற தடுப்பு ஊசிகள் ஏற்படுத்தும் ரத்த உடைவை விட குறைவாக இருப்பதாகவே ஆய்வுகளும் தெரிவிக்கிறது. எடுத்துக்காட்டாக, பெண்களுக்கு பரிந்துரைக்கப்படும் பொதுவான கருத்தடை மாத்திரைகள் ஒவ்வொரு 1000 பேரில் 1 பேருக்கு இரத்த உறைவு அபாயத்தை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் காலத்திற்கு பிறகு பெண்கள் எடுத்துக் கொள்ளும் ஹார்மோன் திறமையை 300 பேரில் ஒருவருக்கு ரத்த உறைவை ஏற்படுத்துவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பல ஆண்டுகளாக சில கடுமையான தவறான தகவல்களையும் மோசமான அறிக்கைகளையும் சந்தித்துள்ளது. ஜேர்மனியில் 2021 இல், இது “வயதானவர்களில் 8 சதவிகித செயல்திறன் விகிதம்” மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இது 65 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கையை குறிக்கிறது என ஆய்வுகள் சுட்டிக்காட்டியது.

தடுப்பூசிக்கு எதிரான கூப்பல்கள் தடுப்பூசிகளை பற்றிய வதந்திகளை பிற பாதிப்புகளுடன் தொடர்புபடுத்தி தவறான செய்திகளை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக தடுப்பூசிகளால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாகவும் தவறான செய்திகளை பரப்பினர்.

அஸ்ட்ராஜெனெகா தங்களது தடுப்பூசியை நிறுத்தியதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களது தடுப்பு ஊசி அவுட் டேட்டட் ஆகிவிட்டது. பிற நிறுவனங்களின் நவீன, புதுப்பிக்கப்பட்ட mRNA தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுகின்றன மற்றும் பாதுகாப்பானவை என ஆய்வுகள் தெரிவிக்கிறது. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு, நேரம் கடந்திருக்கலாம், ஆனால் மனித வரலாற்றின் இருண்ட கட்டங்களில் ஒன்றின் போது உயிர்களைக் காப்பாற்றுவதற்கான முக்கிய கருவியாக அதன் செயல் திறன் இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Read More: “உணவுப் பொருட்களின் லேபிள்கள் தவறான வழிகாட்டுதல்களை தரலாம்” – ICMR எச்சரிக்கை.!!

Next Post

10ம் வகுப்பில் தோல்வியா?… இன்றுமுதல் பயிற்சி வகுப்புகள் வாராந்திர தேர்வுகள்!... உதவி எண் அறிவிப்பு!

Mon May 13 , 2024
Special Class: 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு இன்றுமுதல் துணைத்தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககமும் இணைந்து, ‘தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி […]

You May Like