UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

முதலமைச்சர் கனவில் 25 பேர்.. யாருமே கட்சி நலனுக்காக இல்லை.. பூங்குன்றன் கருத்தால் அதிமுகவில் சலசலப்பு..

அதிமுகவில் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவில் தான் பலர் இருப்பதாகவும், யாருமே கட்சி நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை எனவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார். இது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

pookundran

இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் ‘முதலமைச்சர் கனவு காணமுடியுமா..?’ என்ற தலைப்பில் ஒரு நீண்டப் பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் பல்வேறு தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அவரின் பதிவில் “ முதலமைச்சர் கனவு காணமுடியுமா? என்று கேட்டால், முடியும் என்கிறது இன்றைய வரலாறு. ஆனால் சாதாரண தொண்டன்கூட இந்த பதவியை அலங்கரிக்க முடியும் என்று சொல்லி, செய்துகாட்டியவர் எங்கள் அம்மா என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் ஆசை அதிகமாகும்போது உள்ளடி வேலைகளும் அதிகமாகுமே என்று திகைத்து நிற்பதாக குறிப்பிட்டுள்ள பூங்கன்றன், யாருமே கட்சி நல்லாயிருக்கவேண்டும் என்று நினைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஆக உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டால், எங்களுக்கு என்ன தகுதியில்லை, யார் யாரோ ஆகும்போது நாங்கள் ஆகக்கூடாதா. ஜாதக கட்டம் எங்களுக்கு சிறப்பாக இருக்கிறது என்று சொல்லும் அவர்களின் பதிலை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

poongunran

அதுமட்டுமின்றி, முதலமைச்சர், பொதுச்செயலாளர் கனவில் இருப்பவர்களின் எண்ணிக்கை எனக்கு தெரிந்தே 25ஐ தாண்டுகிறது என்றும், இதில் சிரிப்பு என்னவென்றால் எல்லோரும் ஒன்றாக பயணித்தவர்கள், பயணிக்கப்போகிறவர்கள். காலம் கரைய கரைய காட்சிகள் அரங்கேறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய வேண்டுதல் எல்லாம், இந்த தொண்டர்களை இறைவன் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser1

Next Post

தமிழக பாஜகவில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. இவர் தான் பாஜகவின் புதிய தலைவர்..

Wed Mar 11 , 2020
தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தலைமை அறிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பிறகு, தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. அதன்பிறகு தலைவர் பதவியை நியமிப்பதில் குழப்பம் நீடித்து வந்ததால், கடந்த 6 மாதமாக அந்தப் பதவி நிரப்படாமலே இருந்தது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவரின் பதவிக்கு […]
l murugan tn bjp n

You May Like