அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

அரசியல் புள்ளி உதவியுடன் ஆண்ட்டி செய்த அட்ராசிட்டி..! கொத்தாக பணத்தை கொடுத்து, வெத்தாக நிற்கும் அப்பாவி பெண்கள்..!

ராணிப்பேட்டையில் பண மோசடி வழக்கில் சத்யா என்ற பெண் கைதாகி உள்ள நிலையில், அவருக்கு அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


ராணிப்பேட்டையை சேர்ந்தவர் சத்யா. பார்ப்பதற்கு டிப்டாப்பாக இருக்கும் இவர், பெண்களுக்கான ஃபிட்னஸ் சென்டர், பியூட்டி பார்லர்களுக்கும் சென்று, அங்கு வரும் பெண்களிடமும் நட்பு பழகும் வழக்கம் கொண்டவர். தான் ஒரு பைனான்சியர் என்று சொல்லிக் கொள்ளும் சத்யா, தன்னுடன் பழகும் பெண்களிடம் நெருக்கமாக பழகி, அவர்களின் குடும்ப சூழலையும் தெரிந்து கொள்வார்.

அரசியல் புள்ளி உதவியுடன் ஆண்ட்டி செய்த அட்ராசிட்டி..! கொத்தாக பணத்தை கொடுத்து, வெத்தாக நிற்கும் அப்பாவி பெண்கள்..!

பின்பு அந்த பெண்களிடம் “பேங்கில் ஒரு லட்சம் முதலீடு செய்றீங்கன்னு வெச்சுக்குங்க.. ஒரு மாசம் கழித்து 600 ரூபாய், 700 ரூபாய்தான் கிடைக்கும்.. ஆனா, அதுவே என்கிட்ட ஒரு லட்சம் பைனான்ஸில் கட்டினால் 5 நாளைக்கு ஒருமுறை 3 ஆயிரம் வட்டி கிடைக்கும்.. அதில் 2 ஆயிரம் உங்களுக்கு, கம்பெனிக்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும்.

அதேபோல, 5 சவரன் நகை தந்தால், 10 நாளில் அந்த நகையை திருப்பி தரும்போது 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.. அதில் 3 ஆயிரம் உங்களுக்கு, 2 ஆயிரம் கம்பெனிக்கு” இதுதான் சத்யாவின் கில்லாடி வார்த்தைகள்.

அரசியல் புள்ளி உதவியுடன் ஆண்ட்டி செய்த அட்ராசிட்டி..! கொத்தாக பணத்தை கொடுத்து, வெத்தாக நிற்கும் அப்பாவி பெண்கள்..!

சத்யாவின் இந்த வார்த்தைகளை நம்பி, அவருடன் பழகிய பெண்கள் லட்சம் லட்சமாக பணத்தை கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு, அவர்கள் கொடுத்த பணத்தையே வட்டியாக அவர்களிடம் திருப்பி கொடுத்துள்ளார் சத்யா. நாளடைவில் சத்யாவை நம்பி ரூ.10 லட்சம் வரை பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால், அதை அனைத்தையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிவிட்டார் சத்யா.

இதில் கொடுமை என்னவென்றால், சத்யாவிடம் பணம் கொடுத்த பெண்கள், தங்களின் வீட்டிற்கு தெரியாமல்தான் கொடுத்துள்ளனர். இதனால், இந்த விஷயத்தை வீட்டிலும் சொல்ல முடியாமல், போலீசிடமும் சொல்ல முடியாமல் விழித்துள்னனர். இறுதியில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து சத்யாவை மடக்கி பிடித்தனர். அவரிடம் தங்கள் பணம், நகை குறித்து கேட்டதற்கு, “கம்பெனியில் நீங்க கொடுத்த பணமும், நகையும் காலியாயிடுச்சு” என்று சொல்லியுள்ளார்.

அரசியல் புள்ளி உதவியுடன் ஆண்ட்டி செய்த அட்ராசிட்டி..! கொத்தாக பணத்தை கொடுத்து, வெத்தாக நிற்கும் அப்பாவி பெண்கள்..!

இதற்கு பிறகுதான் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி பெண்கள் ராணிப்பேட்டை போலீசில் சத்யா மீது மோசடி புகார் கொடுத்துள்ளனர். சத்யா இந்த பெண்களை ஏமாற்றி இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களால் முடிந்தவரை சத்யாவை விரட்டி பிடித்து போராடியும் பணத்தை மீட்க முடியாததால்தான் போலீசிடம் வந்துள்ளனர்.

சத்யாவோ தனக்கு பின்னணியில் அரசியல் புள்ளிகள் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், அவர்கள் யார் என்பதை கூற மறுத்துவிட்டார். இதனையடுத்து, சத்யாவை கைது செய்த போலீசார், அந்த அரசியல் புள்ளி யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் புள்ளி உதவியுடன் ஆண்ட்டி செய்த அட்ராசிட்டி..! கொத்தாக பணத்தை கொடுத்து, வெத்தாக நிற்கும் அப்பாவி பெண்கள்..!

சீட்டு பணம், கந்துவட்டி போன்றவைகளில் ஏமாற வேண்டாம் என்று காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், ஒருசிலர் பணத்தாசையால் வாழ்வை தொலைப்பது தொடர் கதையாகி வருகிறது…!

1newsnationuser4

Next Post

டெல்லியில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் சடலம் குஜராத்தில் மீட்பு..! நடந்தது என்ன? காதலி பகீர் வாக்குமூலம்..!

Fri Nov 20 , 2020
டெல்லியில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் ஒருவரின் சடலம், குஜராத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் நீரஜ் குப்தா (45) என்பவர் நவம்பர் 14ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது நண்பர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், நீரஜ் குப்தா கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, போலீசாரிடம் நீரஜ் குப்தாவின் மனைவி அளித்த வாக்குமூலத்தில், […]
டெல்லியில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் சடலம் குஜராத்தில் மீட்பு..! நடந்தது என்ன? காதலி பகீர் வாக்குமூலம்..!

You May Like