ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்ராவ். கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து வருகிறார் இவருடைய மகன் தேஜஸ்வர்( 15 )என்பவர் ஆந்திராவில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் பள்ளி விடுமுறைக்காக தந்தை வீட்டிற்கு வந்திருக்கிறார்.
இந்த நிலையில், தேஜஸ்வர் நேற்று முன்தினம் செல்போனில் பேசியபடி அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கத்தியால் அவரை தாக்கி விட்டு அவருடைய செல்போனை பறித்து சென்றனர். காயமடைந்த தேஜஸ்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றன.