மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. 18 மாத டிஏ நிலுவைத் தொகை… வெளியான முக்கிய தகவல்..

அகவிலைப்படி (டிஏ) திருத்தத்தின் அடுத்த கட்டத்தை மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் டிஏ உயர்வு அறிவிப்பு வெளியாகலாம். DA உயர்வை அரசாங்கம் மறுதொடக்கம் செய்ததிலிருந்து, மத்திய ஊழியர்கள் கடந்த ஆண்டில் DA முதல் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வரை பல உயர்வுகளைப் பெற்றுள்ளனர். எனினும் 18 மாத காலத்திற்கு DA நிலுவைக்கான நிலையான கோரிக்கை குறித்து இன்னும் எந்த செய்தியும் வெளியாகவில்லை..

கொரோனா பரவியதால் ஜனவரி 2020 மற்றும் ஜூன் 2021 க்கு இடைப்பட்ட காலத்திற்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையானது இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.. இந்த தொகையை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த பிரச்சனை மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கடந்த 2021 ஜூலை முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொட்ர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.. 7வது ஊதியக் குழுவின் கீழ் மேலும் இரண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன, DA எண்ணிக்கையை முதலில் 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகவும், பின்னர் மற்றொரு 3 சதவீத உயர்வுடன் 34 சதவீதமாகவும் கொண்டு வந்தது. இப்போது, ​​சமீபத்திய அறிக்கைகள் மற்றும் அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) தரவுகளின்படி, 4 முதல் 6 சதவிகிதம் வரையிலான உயர்வு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது..

Maha

Next Post

குடும்பக்கட்டுப்பாடு செய்யும் பெண் இறந்தால் தரப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்வு.. அரசு தகவல்..

Sat Jul 16 , 2022
அரசு மருத்துவமனைகளில் குடும்பக்கட்டுப்பாடு செய்யும் பெண் இறந்தால் தரப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. குடும்பக்கட்டுப்பாடுக்கு பின் கர்ப்பமானதால் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் இன்று அரசாணை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.. அப்போது, அரசு மருத்துவமனைகளில் குடும்பக்கட்டுப்பாடு செய்யும் பெண் இறந்தால் தரப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அரசு […]

You May Like