விவசாயிகள் கவனத்திற்கு..!! நாளை ரெடியா இருங்க..!! அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி..!!

நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அரசின் வேளாண்மைத் துறை திட்டங்கள் பற்றி விளக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நவம்பர் 1ஆம் தேதியன்று, உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு, கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து, பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உருவாக்கும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மானாவாரி நில மேம்பாட்டு திட்டம், முதலமைச்சரின் ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம், தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பை உயர்த்தும் திட்டம், சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட் நிறுவும் திட்டம், உழவர் சந்தைகளை வலுப்படுத்தும் திட்டம், கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி, வேளாண்மையில் தொழில்முனைவோர்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வேளாண்மை-உழவர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் கவனத்திற்கு..!! நாளை ரெடியா இருங்க..!! அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி..!!

தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, நவம்பர் ஒன்றாம் தேதி அன்று, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும். மேலும், முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

விவசாயிகள் கவனத்திற்கு..!! நாளை ரெடியா இருங்க..!! அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி..!!

நடப்பு ஆண்டில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விவரம் கிராம வாரியாக தயாரிக்கப்பட்டு அக்டோபர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அக்டோபர் 2ஆம் தேதிக்குப் பின் வேளாண் – உழவர் நலத்துறையின் திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விவரமும், நவம்பர் 1ஆம் தேதியன்று நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். எனவே, நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் திரளாகப் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மொபைல் செயலியில் கடன் வாங்குபவர்களா நீங்கள்..? என்ன நடக்கும் தெரியுமா..? மத்திய அரசு எச்சரிக்கை...!

Mon Oct 31 , 2022
ஆன்லைன் கடன் செயலியில் கடன் வாங்குபவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நாளுக்கு நாள் சீன கடன் செயலியில் ஏற்படும் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் சீன கட்டுப்பாட்டில் உள்ள கடன் நிறுவனங்களின் தொல்லைகள் மற்றும் பணம் பறிக்கும் […]
ஆன்லைன் செயலியில் கடன் வாங்குபவரா நீங்கள்..? இது உங்களுக்கான எச்சரிக்கை தான்..!!

You May Like