ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! கடத்தல் குறித்து இலவச எண்ணில் புகார் அளிக்கலாம்…!

ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்‌ திட்டம்‌ / சிறப்பு பொது விநியோகத்‌திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌முறைகேடாக கள்ளச்சந்தையில்‌ விற்று அதிக லாபம்‌ ஈட்டும்‌ நோக்கத்துடன்‌ செயல்பட்டு வருகின்றனர்‌.


உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌பாதுகாப்புத்‌ துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ குடிமைப்‌ பொருள்‌ குற்றப்‌ புலனாய்வுத்‌துறை அலுவலர்கள்‌ தொடர்‌ ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப்‌ பண்டங்கள்‌கடத்தல்‌ மற்றும்‌ பதுக்கலில்‌ ஈடுபடுவோர்‌ / உடந்தையாக செயல்படுவோர்‌ மீது, இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ சட்டம்‌-1955 மற்றும்‌ தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின்‌ கீழ்‌ வழக்கு பதிவு செய்து உரிய மேல்‌ நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்‌.

மேலும்‌, தொடர்‌ குற்றச்‌ செயல்களில்‌ ஈடுபடும்‌ நபர்கள்‌ கள்ளச்சந்தைதடுப்பு மற்றும்‌ இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ வழங்கல்‌ பராமரிப்பு சட்டம்‌ 1980-ன்‌ படி அவ்வப்போது தடுப்பு காவலிலும்‌ வைக்கப்பட்டு வருகின்றனர்‌. கடந்த 01.06.2023முதல்‌ 30.06.2023 வரையிலான ஒரு மாத காலத்தில்‌ கள்ளச்சந்தையில்‌ விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.49,41,826 மதிப்புள்ள 3877 குவிண்டால்‌ பொது விநியோகத்திட்ட அரிசி, 441 எரிவாயு உருளைகள்‌, 201 கிலோகோதுமை, 101 கிலோ துவரம்‌ பருப்பு, 1997 லிட்டர்‌ மண்ணெண்ணெய்‌, 7 பாக்கெட்‌ பாமாயில்‌ ஆகியவையும்‌, மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 187வாகனங்களும்‌ கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.

சூற்றச்‌ செயலில்‌ ஈடுபட்ட 593நபர்கள்‌ கைது செய்யப்பட்டுள்ளனர்‌. கள்ளச்சந்தை தடுப்பு மற்றும்‌ இன்றியமையா பண்டங்கள்‌ சட்டம்‌ 1980-ன் கீழ்‌ 3 நபர்கள்‌ கைது செய்யப்பட்டுள்ளனர்‌. இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ கடத்தல்‌ மற்றும்‌ பதுக்கல்‌ தொடர்பாக பொது மக்கள்‌ 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார்‌ தெரிவிக்கலாம்‌.

Vignesh

Next Post

கண் பார்வை சரி இல்லையா……? அப்படி என்றால் இதை அவசியம் சாப்பிடுங்கள்……!

Sat Jul 15 , 2023
கண்பார்வை ஆரோக்கியம், தசை வளர்ச்சி போன்ற பல உடல் ஆரோக்கியத்திற்கு விட்டமின் ஈ சத்து அவசியமாக இருக்கிறது. விட்டமின் ஈ சத்தை தாராளமாக வழங்கும் உணவுகள் பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். விட்டமின் ஈ சத்து என்பது சில பழ வகைகளில் நிறைந்திருக்கிறது அந்த பழ வகைகளில் கிவி பழம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று வேர்க்கடலையில் இருக்கின்ற இந்த விட்டமின் ஈ சத்து உடலை உறுதியுடன் வைக்கிறது. சூரியகாந்தி […]

You May Like