இந்தியாவின் பிரபலமான தின்பண்டமான சமோசா, மாம்பழ சட்னியை, பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொள்ள தயார் செய்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆஸிதிரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக மே மாதம் இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு தள்ளிபோனது. இந்நிலையில், மோடி ஜூன் 4ம் தேதி ஸ்காட் மோரிசனுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில், ஸ்காட் மோரிசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஞாயிறு சமோசாஸ் மற்றும் மாம்பழ சட்னியுடன் அனைத்தும் புதிதாக தயாரிக்கப்படுகின்றன. இந்த வாரம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடியுடன் உரையாட உள்ளேன். அவர் சைவ உணவு உண்பவர். அதனால், அவருடன் இவற்றை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்’ என பதிவிட்டுள்ளார்.