fbpx

மத்திய அரசின் நிதியை மாநில அரசுகள் வேறு திட்டங்களுக்கு செயல்படுத்துவதாக மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரத்தில் பேசிய அவர், “ஒவ்வொரு நிதி ஆண்டும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கு பல லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவற்றை பெறுவதற்குரிய தணிக்கை ஆவணங்களை மாநில அரசுகள் சமர்ப்பிக்காமல் …

சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “சென்னை மற்றும் திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகம் பேருந்தை இயக்கி வருகிறது. எனினும், கொரோனா தொற்று …

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான். இந்த உயிரிழப்பையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட …

திருச்சி சுங்கச் சாவடியில் சசிகலா சென்ற கார் கண்ணாடி மீது தானியங்கி தடுப்பு விழுந்து கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசியல் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, அதன் ஒரு பகுதியாக, நேற்று சென்னையில் இருந்து திருச்சி வழியாக காரில் தஞ்சைக்கு சென்று …

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சம் பெற்றிருக்கக் கூடிய நிலையில், கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின்போது, எடப்பாடிக்கு 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த உறுப்பினர்கள் படிப்படியாக எடப்பாடி …

வீட்டை விட்டு ஓடிவர மறுத்த திருமணம் நிச்சயமான பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் பொன்மேனி பகுதியில் உள்ள குடியானவர் தெருவைச் சேர்ந்த பாண்டி என்பவரது 19 வயது மகள் அபர்ணா. சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த அபர்ணாவை மர்ம நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு …

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுப்பது குறித்து உயர்நீதிமன்ற கிளையில் சிபிஐ தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரஷீத், உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்த்து, சில …

அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண்ணை தானாக முன்வந்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளாதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கடந்த 6ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் …

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும் பொதுமக்களையும் சசிகலா சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்த வி.கே. சசிகலாவுக்கு வேங்கையன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தொண்டர்கள் …

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 12 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடையும். இதேபோல் …