இளம் பெண்ணை ஆட்டோ டிரைவர் பலாத்கார முயற்சி! திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம் அருகே  ஆட்டோவில் ஏறிய பெண்ணை  பலாத்காரம் செய்ய முயன்ற  23 வயதான ஆட்டோ டிரைவரை  போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சார்ந்தவர் 30 வயதான பெண். இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே  நேற்று இரவு சண்டை நடந்ததாக அறியப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தனது கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்திருக்கிறார். நல்லாளம்  என்ற பகுதியை அடுத்த கூட்டுப் பாதையில் பேருந்துக்காக காத்திருந்தபோது  அவ்வழியே வந்த ஒரு ஆட்டோ  திண்டிவனம் செல்வதாக  கூறி அப்பெண்ணை  ஆட்டோவில் ஏற்றி இருக்கிறார் அந்த இளைஞர். இந்தப் பெண்ணும் அவரை நம்பி ஆட்டோவில் ஏறி இருக்கிறார். ஆனால் அந்த ஆட்டோ திண்டிவனம் செல்லாமல்  வேறு பாதையில் செல்வதை அறிந்த அந்தப் பெண்  ஆட்டோ டிரைவரிடம் முறையிட்டு இருக்கிறார். அந்தப் பெண் சொல்வதைக் கேட்காமல் ஆட்டோ டிரைவர்  பெருமுக்கல் மலைப்பகுதிக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கு சென்றவுடன் அந்த பெண்ணிடம்  தவறாக நடக்க முயன்ற அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்து இருக்கிறார் அந்த ஆட்டோ டிரைவர். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அவரிடம் இருந்து தப்பித்து  திண்டிவனம் அனைத்து மகளிர்  காவல் நிலையம் வந்து  காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர்  குறைவான நேரத்தில் நடவடிக்கையில் இறங்கி அப்பெண்ணை பலாத்காரம் செய்யும் என்ற ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த டிரைவர்   திண்டிவனத்தை அடுத்த  பெருமுக்கல்  மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்த  முருகன் என்பவரது மகன் சுமன் ராஜ் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை  கைது செய்தனர் காவல்துறை . அவருக்கு வயது 23. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்து  பெண்ணை பலாத்காரம் செய்யும் என்று தொடர்பாக தீவிரமான விசாரணை  நடத்தி வருகின்றனர்  காவல்துறை அதிகாரிகள்.

Baskar

Next Post

அடேய் எங்க இருந்துடா வந்தீங்க..? ரூ.2.15 லட்சத்தை நாசமாக்கிய கரையான்கள்..!! வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

Sun Feb 12 , 2023
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள காலாஜி கோராஜி பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் ஏராளமானோர் ரூபாய் நோட்டுகள் மட்டும் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். இதில் 265ஆம் எண் கொண்ட பெட்டகத்தில் சுனிதா மேத்தா என்பவர் ரூ.2.15 லட்சம் பணம் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு சமீபத்தில் பணத்தேவை ஏற்பட்டதால் லாக்கரில் உள்ள பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு […]

You May Like