சொர்க்க வாசலுக்கு 999 படிக்கட்டுகள்..!! 5,000 அடி உயரம்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

பொதுவாகவே அனைவருக்கும் நான் இறந்தால் சொர்க்கத்திற்கு தான் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், சொர்க்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் மகிழ்ச்சியளிக்கும் தருணத்தை அனைவருக்கும் வழங்கும் என பலராலும் நம்பப்படுகிறது. அப்படி உலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மக்கள் சொர்க்கத்தின் வாசல் என்று சொல்கின்றனர்.

அந்தவகையில், சீனாவில் இருக்கும் ஒரு இடத்தை சொர்க்கத்தின் வாசல் என மக்கள் அழைக்கின்றனர். சீனாவின் ஹுனான் மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் ஜாங்ஜியாஜி என்ற பகுதியில் தியான்மென் மலை தேசிய பூங்காவில் உள்ள தியான்மென் மலையில் இயற்கையாகவே Natural Arch என்ற பகுதி தோன்றியுள்ளது. குகை வடிவில் இருக்கும் இந்த சொர்க்க வாசலானது கடல் மட்டத்தில் இருந்து 5,000 அடி உயரத்தில் காணப்படுகிறது. இந்த பகுதிக்கு அவ்வளவு எளிதில் யாரும் சென்றுவிட முடியாது. 2005ஆம் ஆண்டுக்கு பிறகே, இந்த குகைக்கு செல்ல கேபில் கார் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 4,000 அடி வரை மட்டுமே செல்ல முடியும்.

மலையில் ஏறி செல்வதற்கு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சொர்க்க வாசலை சென்றடைய 999 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த படிக்கட்டுகள் தான் சொர்க்கத்திற்கும் செல்லும் படிக்கட்டுகள் என அழைக்கப்படுகிறது. மலைகளுக்கு நடுவே 999 படிக்கட்டுகளை கடந்து சொர்க்க வாசலை பார்வையிடுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். மேலும், சீனர்களின் ஜோதிடத்தை பொறுத்தளவில் இலக்கம் 9 என்பது சிறந்த இலக்கமாகும். எனவே, தான் 999 படிகளை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Read More : வெறும் ரூ.500 முதலீடு..!! லட்சக்கணக்கில் வருமானம்..!! இந்த சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா..?

Chella

Next Post

உடலுறவு வைத்துக் கொள்ளும்போது அதிக வலி இருக்கா..? இது கூட காரணமாக இருக்கலாம்..!!

Wed May 15 , 2024
ஒரு சிலருக்கு வலி மிகுந்த உடலுறவு என்பது பல காரணிகளால் ஏற்படலாம். ஒருவேளை அது உங்களுடைய முதல் உடல் உறவாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு ஏதேனும் பிறப்புறுப்பு தொற்று அல்லது எண்டோமெட்ரியோசிஸ் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இது வஜைனல் ஸ்டீனோசிஸ் (Vaginal Stenosis) என்ற நிலை காரணமாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை அல்லது ரேடியேஷன் சிகிச்சையின் விளைவாக பிறப்புறுப்பு […]

You May Like