அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரை வந்தடைந்த, வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை..

கொரானா தொற்று உலகையே உலுக்கி வரும் நிலையில், சூரத்தில் சோன்பாரி என்ற வாடகைத் தாய் மூலம் பிறந்த பெண் குழந்தை, ஏா் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூா் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

15delkid063125


பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபர் தம்பதியினர் நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஓராண்டுக்கு முன்னாள் சூரத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆலோசனைக்காக அவர்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மகப்பேறு மருத்துவா்கள் தொழிலதிபரின் மனைவியின் கா்ப்பப்பையில் சிறு குறைபாடுகள் இருப்பதாகவும் வாடகைத் தாய் மூலம் அவா் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் யோசனை தெரிவித்தனா். இதையடுத்து, அதற்கு சோன்பாரி என்ற பெண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி, கடந்த மாா்ச் 29-ஆம் தேதி சோன்பாரிக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

இந் நிலையில் கொரானா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், பெங்களூரில் இருந்த பெற்றோா், குழந்தையை விமானத்திலோ அல்லது காரிலோ அழைத்துவர முடியாமல் தவித்துள்ளார். ஆனால், வெற்றிகரமாக குழந்தை பிறக்கக் காரணமாக இருந்த மருத்துவா்கள் குழந்தையை விடியோ மூலம் பெற்றோா்களுக்கு காண்பித்து உடனே வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். 17 நாட்கள் குழந்தை மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியா்கள் பராமரிப்பரிலேயே இருந்து வந்தது.

அதே சமயத்தில் மருத்துவர்களும், ஊழியா்களும் அந்தக் குழந்தையை எப்படி பெற்றோரிடம் சோ்ப்பது என பல வழிகளிலும் சிந்தித்தனா். இந்நிலையில், குழந்தையின் பெற்றோா் டெல்லியிலிருந்து ஏா்ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து சூரத்தில் பெண் குழந்தையை பெற்று அதை பத்திரமாக பெங்களூா் கொண்டுவர ஏற்பாடு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, வாடகைத் தாயான அந்த பெண், குழந்தையைப் பிரிய மனமில்லாமல் சூரத் விமான நிலையத்தில் ஏா்ஆம்புலன்ஸ் செவிலியர்களிடம் குழந்தையை ஒப்படைத்தாா். குழந்தை வாடகைத் தாய் மூலம் பிறந்தது தொடர்பான சான்றிதழின் அடிப்படையில் குழந்தை ஏா் ஆம்புலன்ஸில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்ட அந்த ஏா் ஆம்புலன்ஸ் மாலை 5 மணிக்கு பெங்களூரைச் சென்றடைந்தது. பின்னா் குழந்தை தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

1newsnationuser4

Next Post

இந்தியாவில் ஒரே நாளில் 10% அதிகரித்த கொரானா இறப்பு விகிதம்..

Thu Apr 16 , 2020
இந்தியாவில் கொரானா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. கொலைகார வைராசான கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 24ந்தேதியில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 14ந்தேதி அடுத்த 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள […]
china virus death tolls rises to 560 1225199378194780161

You May Like