ஆந்திராவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நுசிவேடு கிளையில் கேஷியராக பணிபுரிபவர் ரூ.1.56 கோடியை ஆன்லைன் ரம்மி விளையாட திருடியிருப்பது அம்பலமாகியுள்ளது.

குந்த்ரா ரவி தேஜா என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் நுசிவேடு கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக தனது பணம், சொத்து அனைத்தையும் இழந்துள்ளார். இருப்பினும் இந்த விளையாட்டின் மீது அடிமையானதால் பணத்தை திருடி விளையாடும் எண்ணம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் தான் வேலை செய்யும் வங்கியின் வாடிக்கையாளர்களின் வைப்பு கணக்குகளின் பணத்தை தனது கணக்கிற்கு மாற்றி தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.

வங்கியின் மேலாளர் மோகன் ராவ் நிலையான வைப்பு கணக்குகளில் பண வேறுபாடுகளை கண்டறிந்து விசாரணை நடத்தியதில் குந்த்ரா ரவி தேஜா ரூ.1,56, 56,897 வரை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் இதுவரை ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக எவ்வளவு பணம் செலவு செய்தார் என்று போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த செய்தி வெளிவந்தால் அந்த கிளையில் பணம் போட்டோர் தங்கள் பணத்தை திருப்ப வங்கியில் குவிந்து வருகின்றனர்.