'பூவே உனக்காக' படத்தில் நடித்த ஹீரோயினா இது..! அட.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டாங்களே..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்.. ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா.. முதல்வர் அறிவிப்பு.. 'மாமியார் வீட்டுல இராணுவ வீரர்னு சொல்லிட்டேன்.. அதான்..' சீருடை அணிய தெரியாமல் சிக்கிய போலி இராணுவ வீரர்..! ஜெயலலிதா சிலை திறப்புக்கு உதவிய நடிகர் அஜித்.. எப்படி தெரியுமா..? பளிச்சென்று பறந்து கொண்டிருந்த UFO..! "இப்படி ஒன்றை பார்க்கவே முடியாது" ஷாக் ஆன விமானி..! யூடியூப், பேஸ்புக் வீடியோக்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..! பயணி போல் நடித்து கார் டிரைவர் கொலை..! 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தை ஏமாற்றிய கொலையாளி..! "Boyfriend இல்லாமல் கல்லூரிக்கு வரக்கூடாது.." பிரபல கல்லூரியின் நோட்டீஸால் சர்ச்சை.. தொடர்ந்து 18 கொலைகள்..! சிக்கிய சீரியல் கில்லர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..! இனி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்திலேயே செல்லலாம்..!! டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி..? 'இதெல்லாம் ரொம்ப தவறுங்க..' மேலாடையோடு தொட்டால்.. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு SC இடைக்கால தடை..! ஜெ. நினைவில்லம்.. அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்.. மேல் முறையீடு செய்த தமிழக அரசு.. உயரம் என்னவோ குறைவு தான்.. ஆன அவுங்க காதல் பெரிசுங்க.. மணமக்களுக்கு குவியும் வாழ்த்து..! ஆஹா.. என்ன ஒரு அதிசயம்..! ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்..! மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு..!

ஊரடங்கு அவலம்.. வேலை பறிபோனதால் தற்கொலை செய்துகொண்ட தம்பதி.. தவிக்கும் 1 வயது குழந்தை..

கொரோனா ஊரடங்கு காரணமாக, வேலை பறிபோனதால், தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு பலரது வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றியுள்ளது. பொருளாதாரத்தை மீட்கும் விதமாக, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலரும் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள பர்ரா என்ற பகுதியில் வசித்து வந்த பிரின்ஸ் என்ற நபர், மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 34 வயதான இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், ஒரு வயது குழந்தையும் உள்ளனர். இந்த சூழலில் எதிர்பாராத கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது வேலை பறிபோயுள்ளது. இதனால் வருமானம் இன்றி தவித்து வந்த அவருக்கு உணவு பொருட்களை வாங்கக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.

up suicide

இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரின்ஸ், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை ஜன்னல் வழியாக பார்த்த அவரது மனைவி, தொலைபேசியில் உறவினருடன் பேசி நடந்ததை தெரிவித்தார். பின்னர் குழந்தையை தனியாக விட்டுவிட்டு, மற்றொரு அறையில் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

up police

இதனைத்தொடர்ந்து அவர்களது வீட்டிற்கு வந்த உறவினர்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஊரடங்கு காரணமாக வேலையை இழந்ததால் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெற்றோரை இழந்த அந்த ஒரு வயது பிஞ்சுக் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

1newsnationuser1

Next Post

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இணையதளக் கல்வி முறை அறிமுகம்...

Wed Jun 24 , 2020
மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை வீடியோ மூலம் கல்வி கற்கும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் கொரோனா காரணாமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் நடக்கவிருந்த பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்தது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஜுலை மாதம் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. […]
maxresdefault 2 1

You May Like