”தொடங்குறது ஈசி..!! தொடர்வது தான் கஷ்டம்”..!! நடிகர் விஜய்க்கு அறிவுரை சொன்ன சீமான்..!!

விஜய் இந்த மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும் என சீமான் அறிவுரை கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நான் வரமாட்டேன் என்று தெரிந்துதான் என்னை கூட்டணிக்கு அழைக்கிறார்கள். எப்படி பார்த்தாலும் நான் தனியாகத்தான் நிற்பேன். கூட்டணிக்கு வந்தால் காசு தான் கொடுப்பார்கள். ஒன்றிரண்டு சீட்களை வைத்து நாம் என்ன செய்ய முடியும். மேசையை தான் தட்ட முடியும்‌” என்றார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, “மக்களவை தேர்தலுக்கு விஜய் வரமாட்டார்‌‌. அவர் வந்தாலும் அது பலனளிக்காது. விஜய் எந்த கோட்பாடோடு அரசியலுக்கு வருகிறார் என்பது தெரியவில்லை. தொடங்குதல் எளிது. தொடர்வது கடினம். இதுதான் விஜய்க்கு நான் சொல்லும் அறிவுரை. மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். அதை விஜய் செய்வார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

1newsnationuser6

Next Post

சுவாதி நட்சத்திரத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி..!! உச்சத்தில் சனி..!! விஜய்க்கு அது கிடைக்கவே கிடைக்காது..!! ஜோதிடர்கள் கணிப்பு..!!

Fri Feb 2 , 2024
நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் புதிய கட்சி துவங்கியுள்ள நிலையில், அவரது கட்சி எந்த அளவிற்கு வெற்றிகரமாக அமையும் என ஜோதிடர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சதீஷ் என்கிற ஜோதிடர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜோதிட கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் இன்று ஆரம்பத்திற்கு கட்சியின் பெயர் “தமிழக வெற்றி கழகம்”. இன்றைய […]

You May Like