BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer & Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 34 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://bel-chennai-trainee-project-engineer-notification-2022-recruitment

Vignesh

Next Post

இன்று காங்கிரஸ் தலைவராக பதவியேற்கவுள்ள மல்லிகார்ஜுன கார்கே.!

Wed Oct 26 , 2022
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பதவியேற்கவுள்ளார். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்ற இத்தேர்தலில் சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரும் நேரடியாக போட்டியிட்டிருந்தனர். தேர்தலின் வாக்குப்பதிவுகள் 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அக்டோபர் 19ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. […]
காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் மல்லிகார்ஜூன கார்கே..!! எத்தனை வாக்குகள் தெரியுமா..?

You May Like