தினமும் காலையில் வெறும் வயிற்றில் புதினா சாறு குடிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றங்கள் நிகழுமா.!?

பொதுவாக அசைவ உணவுகளில் சுவையை அதிகரிப்பதற்காகவும், மனமாக இருப்பதற்காகவும் சேர்க்கப்படுவது தான் புதினா. இந்த புதினாவில் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும் பல நல்ல பண்புகளும் இருக்கின்றன என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். எனவே இந்த புதினாவை சாறாக செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் மாற்றங்கள் நிகழும். அவை என்னென்ன என்பதையும் புதினா சாறு எப்படி செய்யலாம் என்பதையும் குறித்து பார்க்கலாம்.

புதினா சாறு செய்ய தேவையான பொருட்கள்: புதினா – 1கப், எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – சிறிதளவு

செய்முறை: புதினாவை நன்றாக கழுவி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு வடிகட்டி வைத்த புதினா சாறில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து குடித்து வரலாம். அல்லது புதினாவை சாறாக எடுத்து வைத்துக் கொண்டு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

  1. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் புதினா சாறு குடிக்கும் போது வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடையை விரைவாக குறைக்க முடியும்.
    2. வயிறு வலி, வயிற்றில் புழு, வயிறு எரிச்சல் போன்ற பல்வேறு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை புதினா சாறு குடிப்பதால் சரி செய்யலாம்.
    3. முகத்தில் ஏற்படும் மருக்கள், பருக்கள், புண்கள் போன்றவற்றை புதினா சாறு சரி செய்கிறது.
    4. அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் புதினா சாறு தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    5. வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளை சரி செய்யும். இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளையும் சரி செய்யும் புதினாவை அடிக்கடி குடித்து வந்து நல்ல பலன் பெறலாம்.

1newsnationuser5

Next Post

ஒரு சில உணவை எந்த உணவோடு கலந்து சாப்பிடக்கூடாது தெரியுமா.! மருத்துவர்களின் எச்சரிக்கை.!?

Sun Feb 4 , 2024
நாம் அன்றாடம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும் என்பதே பலரும் விரும்பி வருகிறோம். ஆனால் ஒரு சில உணவுகளை மற்றொரு உணவுகளுடன் கலந்து சாப்பிடும் போது அது நம் உடலில் எதிர்வினையை ஏற்படுத்தி நோய் பாதிப்பிற்குள்ளாகிறோம். எனவே மருத்துவர்களும் ஒரு சில உணவுகளை மற்ற உணவுகளுடன் கலந்து சாப்பிடக்கூடாது என்று எச்சரித்து வருகின்றனர். அவை என்னென்ன உணவுகள் என்பதை குறித்து பார்க்கலாம். 1. தேனையும், நெய்யையும் ஒரே […]

You May Like