உடல் எடையை அதிகரிக்க, முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர உதவும் அரிசி கழுவிய தண்ணீர்..!

பொதுவாக நம் அனைவரது வீடுகளிலும் சமைக்கும் போது அரிசியை கழுவி விட்டு அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் அந்த அரிசி கழுவிய நீரில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளது. அரிசி கழுவிய அல்லது ஊறவைத்த நீரில் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை குறித்து பார்க்கலாம்?

அரிசியில் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்திருப்பதால் அதை கழுவி கீழே ஊற்றும் நீரும் பல்வேறு சத்துக்களை கொண்டதாகவே இருக்கிறது. இந்த அரிசி கழுவிய நீரில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளதால் இதை வைத்து முகத்தை கழுவும் போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புது செல்கள் உருவாக்க வழிவகை செய்கிறது.

மேலும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும் போது இந்த அரிசி கழுவிய நீரில் கசகசாவை ஊறவைத்து அதனை குடிக்க கொடுத்தால் வயிற்றுப்போக்கு உடனே நின்று விடும். குளிக்கும்போது அரிசி கழுவிய நீரை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.

உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் அரிசி ஊறவைத்த நீரை குடித்து வர இதில் உள்ள அதிக அளவு கார்போஹைட்ரேட் உடல் எடையை விரைவாக அதிகரிக்க செய்யும். மேலும் தோலில் ஏற்படும் சுருக்கம், வறட்சி போன்றவற்றையும் சரி செய்து இளமையாக இருக்க பெரிதும் உதவி புரிகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய இந்த அற்புத நீரை கீழே ஊற்றாமல் பயன்படுத்தி வந்தால் உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

1newsnationuser5

Next Post

DMK-வுக்கு புது விளக்கம்..!! வாரிசு அரசியல், கட்டப்பஞ்சாயத்து..!! விளாசிய ஜேபி நட்டா..!!

Mon Feb 12 , 2024
சென்னையில் நடந்த ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ”மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக பொய் சொல்லி கொண்டிருக்கிறது. திமுக வடக்கு-தெற்கு பிரச்சனையை கிளப்பி வருகிறது. மத்திய அரசு இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கி […]

You May Like