சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

சென்னையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து இன்று (17.02.2023) தனியார் துறை வேவைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற இருக்கிறது.

இதில் 8, 10, 12ஆம் வகுப்பு ஐடிஐ, டிப்ளமோ, கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதி உள்ளோர் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. மேலும், இதில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் http://www.tnprivatejcbs.tn.gtv.n பதிவேற்றம் செய்யவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் கூடுதல் சமுதாய சேவைகள் மூலம் ரூ.50,000 வருவாய் ஈட்ட முடியும்...!

Fri Feb 17 , 2023
நாட்டில் சுமார் 40,000 நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்ற சேவைகளை அளிப்பதன் மூலம் ரூ.50,000 வருவாய் ஈட்டி வருவதாக நியாயவிலைக் கடைகளின் மாற்றத்திற்கான தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சஞ்ஜீவ் சோப்ரா தெரிவித்தார். மாநாட்டில் பேசிய அவர், பொது விநியோக சேவை நடவடிக்கைகளுக்கு அப்பால், மற்றப் பொருட்களை விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன் மூலம் துடிப்புமிக்க, நவீனமான, சாத்தியமிக்க நியாயவிலைக் கடைகளாக மாற்றுமாறு அவர் […]
பொங்கல் பண்டிகை முதல்..!! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..!! வங்கிக் கணக்கு பணிகள் தீவிரம்..!!

You May Like