சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்..! நிச்சயம் திருப்பி அடிக்கும்..! முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி..! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்..! 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்..? கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு..! ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு..! கட்சித் தலைமை நடவடிக்கை..! 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..! கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு! டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது! ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா..! ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது? பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை! அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன்

பிஹார்: உயிரை காப்பாற்றிய 2 யானைகளுக்காக ரூ.5 கோடி மதிப்பிலானசொத்துக்களை வழங்கிய நபர்

தான் வளர்க்கும் யானைகள் மீதான பாசத்தால், பீஹாரை சேர்ந்தவர் தனது கோடிக்கணக்கான சொத்தில் பாதியை அவற்றிற்கு எழுதி வைத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil News large 2555292

பீஹாரை, சேர்ந்தவர் அக்தர் இமாம். இவர் ஆசிய யானை மறுவாழ்வு மற்றும் வன விலங்கு டிரஸ்ட் தலைமை நிர்வாகியாக உள்ளார். இவருக்கு சிறு வயது முதலே யானைகள் மீது பிரியம் அதிகம். இதனால், இவர் இரண்டு யானைகளை வளர்த்து வருகிறார். அவற்றிற்கு மொடி மற்றும் ராணி என பெயர் வைத்து, தனது குடும்பத்தினரை போல் கவனித்து கொள்கிறார். அவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அனைவரும் தனியே சென்று விட்டனர். அக்தர் இமாம் மட்டும் யானைகளை வளர்த்து வருகிறார்.

gallerye 164523847 2555292

இந்நிலையில், தனது சொத்தில் பாதியை யானைகள் பெயரில் அக்தர் எழுதி வைத்துள்ளார். அவரது பெயரில் உள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகளில் 5 கோடியை மனைவி மற்றும் மகன்கள் அனுபவித்து வரும் நிலையில் எஞ்சிய 5 கோடி ரூபாய் சொத்தை யானைகள் பெயரில் அக்தர் எழுதி வைத்துள்ளார். யானைகள் மறைவிற்கு பிறகு அறக்கட்டளைக்கு, அந்த சொத்துகள் சென்று விடும் எனக்கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத சிலர் என்னை கொலை செய்ய முயன்றனர். ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து தாக்க முயன்றனர். ஆனால் யானைகள் சத்தம் போட்டு எழுப்பின. இதனால், நான் தப்பித்தேன். சமூக விரோதிகள் ஓடிவிட்டனர். எனது மகன் என் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி போலீசில் புகார் அளித்து சிறையில் அடைத்தார். ஆனால், குற்றச்சாட்டுகள் பொய் என நான் நிரூபித்ததும் அவர்கள் பிரிந்து சென்று விட்டனர். எனது மகன், யானையை கடத்தல் காரர்களிடம் விற்க முயன்றார். ஆனால் பிடிபட்டு கொண்டார். யானைகளது பெயரில் சொத்தை எழுதி வைத்ததால், குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1newsnationuser4

Next Post

தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 2000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.. உயிரிழப்பும் அதிகரிப்பதால் அதிர்ச்சி..

Wed Jun 10 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாகவே, சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு […]
கொரோனா

You May Like