தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..?அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. பாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது? 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது பிராய்லர் மீன்கள்… அசைவ பிரியர்களே உஷார்… இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் : அமெரிக்கா பாராட்டு "அதற்கு இணங்கவில்லை என்றால் வேலை நிரந்தரம் இல்லை" – ஆயுஷ் இயக்குநரகத்தில் வேலை செய்யும் பெண் குற்றசாட்டு…. வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்த காதலியை திட்டமிட்டு கொலை செய்த காதலன்…

சானிடைசர் தெளித்ததால் பற்றி எரிந்த பைக்.. பதறவைக்கும் வைரல் வீடியோ..

குஜரத்தில் பைக் மீது சானிடைசர் தெளித்ததால் பைக் பற்றி எரிந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.


கொரோனாவைக் கட்டுப்படுத்த 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்தாலும் கூட, இந்த முறை மத்திய அரசு தளர்வுகள் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அனைத்து தொழில் நிறுவனங்களையும் தொடங்கவும், பொது போக்குவரத்தை ஒரு சிலக் கட்டுப்பாடுகளுடன் இயக்கவும் அரசு அனுமதி அளித்தது.

அதன்படி இன்று பேருந்து, ரயில் உள்ளிட்ட சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அரசு மற்றுன் தனியார் நிறுவன பணியாளர்களும் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். எனினும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை பொது மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருசக்கர வாகனம் மீது சானிடைசர் தெளித்தபோது திடீரென தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள புகழ்பெற்ற அரவிந்த் மில் என்ற ஜவுளி உற்பத்தி தொழிற்சாலை ஊரடங்கு தளர்வு காரணமாக இன்று திறக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அரவிந்த் மில்லுக்கு வந்து செல்லும் வாகனங்கள் மீது சானிடைசர் தெளிக்கப்பட்டது.

அந்த வகையில் சானிடைசர் தெளிக்கப்பட்ட ஒரு பைக்கில் திடீரென தீப்பற்றியது. இதனையடுத்து உடனடியாக அந்த பைக்கை ஓட்டிய நபர் பைக்கை கீழே போட்டுவிட்டு இறங்கி ஓடிவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

1newsnationuser1

Next Post

ஜாலியாக இருந்த கள்ளக்காதல் ஜோடி... கத்தி முனையில் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்...

Mon Jun 1 , 2020
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கள்ளகாதல் ஜோடி புதருக்குள் உல்லாசமாக இருந்த வேளையில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள் கத்தி முனையில் அந்த பெண்ணை கற்பழித்ததுடன் பணம், நகையையும் பறித்து சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வெவ்வேறு திருமணம் ஆன ஆணும் பெண்ணும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இரு வீட்டையும் ஏமாற்றி அடிக்கடி இவர்கள் ஊர் சுற்றுவதும், உல்லாசமாக இருபதுமாக இருந்து […]
no means no1

You May Like