29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதல் வெற்றி யாருக்கு? உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியீடு – இந்தியா நிலை என்ன?

மைக்ரோசாப்ட் இயக்குனர் குழுவில் இருந்து விலகிய பில்கேட்ஸ்…

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவிலிருந்து விலகியுள்ளார். மேலும், பொதுச்சேவைக்கு அதிக நேரம் ஒதுக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.

bilgates

கணினித் தொழில்நுட்பத்தின் வரலாற்று முகம் என்று வர்ணிக்கப்படும் 64 வயதான பில் கேட்ஸ், தனது நண்பருடன் இணைந்து உருவாக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நான்கு தசாப்தங்களுக்கு முன், அதாவது 1975ஆம் ஆண்டு பால் ஆலனுடன் இணைந்து பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவினார். இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக பில்கேட்ஸ் கூறும்போது, “உலகளாவிய சுகாதாரம் மற்றும் மேம்பாடு, கல்வி மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் பிரச்சனைகளில் எனது நேரத்தை கூடுதலாக செலவழிக்க போவதால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறுகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக பில்கேட்ஸ் தொடர்ந்து பணியாற்றுவார் எனவும், தனது தொடர்ச்சியான பங்களிப்பை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்குவார். பில் கேட்ஸின் நட்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும், அவருடன் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன் என சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பில் கேட்ஸ் விலகல் குறித்து வெட்பஷ் ஆய்வாளர் டேனியல் இவ்ஸ் கூறுகையில், கடந்த பத்தாண்டுகளில் பில் கேட்ஸ் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற தொண்டு நிறுவனங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் இந்த நடவடிக்கை ஆச்சரியமானதல்ல எனவும், இதுமட்டுமின்றி பில்கேட்ஸ் தொழில்நுட்ப உலகில் ஒரு வரலாற்று நபராக இருக்கிறார். மைக்ரோசாப்ட், பல பத்தாண்டுகளுக்கு அவர் பெயரை சொல்லிக்கொண்டு தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

விஜய் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து குஷ்பு ட்வீட்...முறையாக வரி செலுத்தியுள்ளார்...வழக்கில் இருந்து ஓய்வு எடுக்கலாமா?...

Sun Mar 15 , 2020
பிகில் பட சம்பள விவகாரத்தில், வருமான வரித்துறை சோதனை நடத்தியதை குறித்து, வழக்கிலிருந்து ஓய்வு எடுக்கலாமா? விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு பற்றி குஷ்பு ட்வீட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். பிகில் பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இந்த ஐடி ரெய்டின் போது விஜய் வீட்டில் […]
kushboo tweet about vijay salary

You May Like