ஆண் நண்பர்களுடன் ’பர்த் டே பார்டி’..!! குளிர்பானத்தில் மயக்க மருந்து..!! கூட்டு பலாத்காரத்தால் அதிர்ச்சி..!!

ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த இளம்பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் புனே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் கடந்த அக்.13ஆம் தேதி தனது தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதில், தனக்கு நெருக்கமான 3 ஆண் நண்பர்களையும், 2 பெண் நண்பர்களையும் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தோழி என்றும் பாராமல் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என அந்த 3 நபர்களும் ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இரவு விருந்து நடந்து கொண்டிருந்தபோது அந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த அந்த 3 பேரும் அவரை தனி அறையில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து, சுயநினைவு திரும்பி எழுந்த அந்த பெண் தான் தனது நண்பர்களாலே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை உணர்ந்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஆண் நண்பர்களுடன் ’பர்த் டே பார்டி’..!! குளிர்பானத்தில் மயக்க மருந்து..!! கூட்டு பலாத்காரத்தால் அதிர்ச்சி..!!

முதலில் இதுகுறித்து புகார் அளிக்காத நிலையில், ஒரு கட்டத்தில் அவர்கள் மீண்டும் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளனர். இதனால், அந்த பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கூட்டு பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய 3 இளைஞர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ரசிகர்களை மகிழ்விக்கும் டி20 கிரிக்கெட்..!! எப்படி உருவானது தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்

Sun Oct 16 , 2022
ரசிகர்களை மகிழ்விக்கும் விளையாட்டாக உருமாறியுள்ள டி20 கிரிக்கெட், எப்படி உருவானது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். கடந்த 2002ஆம் ஆண்டு புகையிலை விளம்பரங்கள் மீதான தடை காரணமாக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை பெரிய அளவில் சிக்கலை சந்தித்தது. அப்போதுதான், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் வணிகப்பிரிவு மேலாளர் ஸ்டூவர்ட் ராபர்ட்சன், அமெச்சூர் மற்றும் ஜூனியர் அளவில் நடத்தப்பட்டு வரும் டி 20 போட்டியை முன்மொழிந்தார். டெஸ்ட், […]
ரசிகர்களை மகிழ்விக்கும் டி20 கிரிக்கெட்..!! எப்படி உருவானது தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்

You May Like