“தமிழகத்திற்கு பிஜேபி கொடுத்த ட்விஸ்ட் ..”! விரைவில் வெளியாகும் வேட்பாளர்கள் பட்டியல்.! பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் அறிவிப்பு.!

பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பி.எல் சந்தோஷ் கோவையில் கட்சி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முதல் கட்ட பாராளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார்.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறது.

தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. இதற்கு எதிராக கடந்த தேர்தல்களில் களம் கண்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதனால் பாஜக மற்ற கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. புதிய கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷ் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வந்த அவர் நேற்று கோவை சென்று பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற நிர்வாகிகளுடன் பொதுத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் வழங்கிய தகவல்களையும் தமிழக பாஜகவுடன் பகிர்ந்திருக்கிறார் சந்தோஷ்.

இந்த மாத இறுதியில் பாரதிய ஜனதா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்த அவர், அதில் தமிழகத்தில் போட்டியிட இருக்கும் பாரதிய ஜனதா வேட்பாளர்களின் பெயரும் இடம் பெறும் என தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழக பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலும் டெல்லிக்கு அனுப்பப்பட இருப்பதாக சந்தோஷ் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Post

"சித்தி கொடுமை.." அடித்தே கொலை செய்யப்பட்ட '9' வயது சிறுமி..!! பதற வைக்கும் வீடியோ காட்சி.!

Mon Feb 5 , 2024
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் சித்தி கொடுமையால் ஒன்பது வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் அவுரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பில்ஹவுரி கிராமத்தில், வசித்து வந்த 9 வயது சிறுமியின் தந்தை பர்சானா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு பர்சானா, 9 வயது சிறுமியை […]

You May Like