“ அதானி விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த பயமும் இல்லை..” உள்துறை அமித்ஷா பேட்டி..

அதானி விவகாரத்தில் பாஜக மறைப்பதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்..

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதானி நிறுவனங்களின் பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றனர்..

இதை தொடர்ந்து அதானிக்கு சாதகமாக பாஜக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், நாடாளுமன்றத்திலும் அதானி விவாகரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்நிலையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமித்ஷா, அதானி விவகாரத்தில் பாஜக மறைப்பதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.. மேலும் “ 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு போட்டி இருக்கும் என்று நான் கருதவில்லை.. ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியை முழுமனதோடு ஏற்றுக்கொண்டுள்ளது.. கர்நாடகாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும்.. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்..

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமித் ஷா, “அவர்கள் ஏன் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை? பெகாசஸ் விவகாரம் எழுப்பப்பட்டபோது நான் நீதிமன்றத்திற்கு ஆதாரத்துடன் செல்லுங்கள் என்று கூறியிருந்தேன், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.. அவர்களுக்கு சத்தத்தை உருவாக்க மட்டுமே தெரியும்..” என்று தெரிவித்தார்..

மத்திய புலனாய்வு அமைப்புகளை மோடி அரசு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

பிக்பாஸ் பிரபலம் கட்டும் புதிய வீடு..!! தாமரை வெளியிட்ட வீடியோ..!! குவியும் வாழ்த்து..!!

Tue Feb 14 , 2023
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்ட மற்றும் மெகா ஹிட் ஷோவாக இருந்து வருகிறது பிக்பாஸ். கடந்த 2017ஆம் ஆண்டு இதன் முதல் சீசன் ஒளிபரப்பாகிய நிலையில், சமீபத்தில் 6-வது சீசன் முடிவுக்கு வந்தது. இந்த 6 சீசன்களையுமே உலகநாயகன் கமல்ஹாசன் மிக சுவாரசியமாக தொகுத்து வழங்கியதும் இந்த ரியாலிட்டி ஷோ, மெகாஹிட் ஆக முக்கிய காரணம். பிக்பாஸ் ஷோவில் மக்களுக்கு நன்கு பரிச்சயமான நபர்களுடன், இதுவரை தெரியாத சில நபர்களும் பங்கேற்பது […]

You May Like