ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..!! எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசிய வீடியோ..!! அதிரவைத்த முதல்வர்..!!

தெலங்கானாவில் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாக சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வீடியோவை முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்டிர சமிதியின் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தெலங்கானாவில் ஆட்சி அமைத்ததில் இருந்தே எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி தங்கள் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக சந்திரசேகர் ராவின் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை தேசிய கட்சியாக அறிவித்துள்ள சந்திரசேகர ராவ், கட்சியின் பெயரையும் பாரத் ராஷ்டிர சமிதி என்று மாற்றினார். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக 3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடியையும் மத்தியில் ஆளும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் சந்திரேசகர் ராவ்.

ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..!! எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசிய வீடியோ..!! அதிரவைத்த முதல்வர்..!!
முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

இந்நிலையில், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாகவும் இதற்கான பேரத்தை நடத்திய 3 பேரை கைது செய்து இந்த குதிரை பேரத்தை முறியடித்து இருப்பதாக தெலங்கானா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தெலங்கானாவில் ஆளும் எம்.எல்.ஏக்கள் 4 பேரிடம் தலா ரூ.50 கோடி பணம், அரசு காண்ட்ராக்ட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாகவும் கட்சி மாற வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த ஒருவர் பேரத்தில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ள தெலங்கானா பாஜக தலைவர்கள், முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இதுபோன்ற குதிரை பேர நாடகங்களை சந்திரசேகர் ராவ் நடத்துவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

இதற்கிடையே, தெலங்கானா மாநிலத்தில் உள்ள முனுகோடு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வந்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதேபோல, பீகார் மாநிலத்தில் உள்ள மோகமா மற்றும் கோபல்கஞ்ச் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், மகாராஷ்ட்ராவில் உள்ள அந்தேரி கிழக்கு தொகுதிக்கும் ஹரியானா மாநிலத்தில் உள்ள அதம்பூர், உத்தரபிரதேசத்தில் கோலா கோகரண்ணாத் தொகுதியிலும், ஒடிசா மாநிலத்தின் தாம்நகரிலும் இடைத்தேர்தல் முடிவடைந்தது. இந்த இடைத்தேர்தலில் துணை ராணுவப் படையினரும், அந்தந்த மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முனுகோடு தொகுதியில் 105 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களாக கருதப்படுகிறது.

Chella

Next Post

#Breaking..!! திராவிட இயக்க பேச்சாளர் நெடுஞ்செழியன் காலமானார்..!! தலைவர்கள் இரங்கல்..!!

Fri Nov 4 , 2022
தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் காலமானார். பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் நெடுஞ்செழியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து […]
#Breaking..!! திராவிட இயக்க பேச்சாளர் நெடுஞ்செழியன் காலமானார்..!! தலைவர்கள் இரங்கல்..!!

You May Like