தற்கொலை செய்துகொண்ட தோனி பட நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு திரைப்படம் உருவாகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். ‘கை போ சே’, ‘சுதேசி ரொமான்ஸ்’, ‘டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது.
இந்நிலையில், திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலிவுட் திரையுலகில் நிலவும் வாரிசு ராஜ்ஜியத்தாலும், சுஷாந்தின் வளர்ச்சியை பிடிக்காத சில முன்னனி நடிகர்களாலும் அவரது வாய்ப்புகள் தடுக்கப்பட்டதாகவும், அதைதொடந்து எழுந்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது வாழ்க்கையை தழுவி SUICIDE or MURDER: A star was lost எனும் பெயரில் திரைபப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தை விஜய் சேகர் குப்தா தயாரிக்க, ஷமி மாலிக் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மாலிக், தனது படத்தில் பாலிவுட் திரையுலகில் நெபோடிசம் எனும் பெயரில் வாரிசு நட்சத்திரங்கள் மற்றவர்களின் வாய்ப்பை பறிக்கும் உண்மை சூழல் குறித்து தோல் உரிக்கப்படும். அங்கு எந்தவித திரையுல பின்புலமும் இன்றி முன்னேற நினைக்கும் ஒரு இளைஞன் சந்திக்கும் அனைத்து சங்கடங்கள் குறித்தும் எனது படம் பேசும், மேலும்இந்த படத்தில் ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
தற்போதைய, கொரோனா சூழல் நீங்கினால் ஜூலை மாதத்தில் படபிடிப்பை தொடங்கி செப்டம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.