சென்னையில் பதற்றம்: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட குழந்தைகள்.!

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் அண்ணா நகர் ஜேஜே நகர் மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளுக்கு சற்று நேரத்திற்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மர்ம நபர்கள் இமெயில் மூலமாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர் .

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மோப்பநாய் உதவிகளுடன் பள்ளிகளில் வெடிகுண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியின் முன்கூடியதால் பதற்றமான சூழ்நிலை உருவானது .

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது . குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா.? அல்லது இதற்குப் பின் ஏதேனும் சதி செயல் உள்ளதா.? என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

இனி எந்த தடையும் இல்லாமல் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யலாம்..!! கண்டிப்பா இதை மறந்துறாதீங்க..!!

Thu Feb 8 , 2024
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணிக்கின்றனர். இதில் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத வகைகளில் பயணிப்பவர்களும் அடங்குவர். ரயிலில் உறுதியான இருக்கையைப் பெற, பல முறை டிக்கெட்டுகளை மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். ஆனால், பலர் திடீரென்று எங்காவது செல்ல வேண்டியிருக்கும். உடனடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் கடினம். எனவே, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, […]

You May Like