ஓடிவர மறுத்த காதலியை ஓடவிட்டு குத்திய காதலன்..! திருமணத்திற்கு மறுத்ததால் அரங்கேறிய கொடூரம்..!

வீட்டை விட்டு ஓடிவர மறுத்த திருமணம் நிச்சயமான பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் பொன்மேனி பகுதியில் உள்ள குடியானவர் தெருவைச் சேர்ந்த பாண்டி என்பவரது 19 வயது மகள் அபர்ணா. சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த அபர்ணாவை மர்ம நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். கொலையாளியை தடுக்க முயன்றபோது, அபர்ணாவின் தாய் கத்தி கூச்சலிட்டதால், அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஒன்று திரண்டனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அபர்ணாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதுடன், தடயவியல் நிபுணர்களும் கொலையாளியின் தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தால் நிகழ்ந்த படுகொலை சம்பவம் என்பது தெரியவந்தது.

Love: A Feeling or a Choice?. And the problems with both of them. | by  Phillip Morina | Ascent Publication

அபர்ணா பிளஸ் டூ படித்து வந்த போது விராட்டிபத்து கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளதாகவும், அந்த இளைஞர் அபர்ணாவை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அபர்ணாவை திருமணம் செய்து கொள்ள அவர் வீட்டிற்கு ஹரிஹரன் பெண் கேட்டு வந்த நிலையில், அபர்ணாவின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹரிகரனுடன் பேசுவதை அபர்ணா நிறுத்திக் கொண்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முனீஸ்வரன் என்பவருடன் அபர்னாவுக்கு திருமணம் நடத்த கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது.

Honour Killing' Suspected Behind Gruesome Killing of TN Couple | NewsClick

ஏற்கனவே, பெண் கொடுக்க மறுத்த ஆத்திரத்தில் இருந்த ஹரிஹரனுக்கு, வேறு மாப்பிள்ளைக்கு அபர்ணாவை திருமணம் செய்ய நிச்சயித்த தகவல் கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் இருந்த அபர்ணவை சந்தித்த ஹரிகரன், தன்னிடம் சிரித்து பேசியது எல்லாம் பொய்யா? தன்னை காதலிக்கவில்லையா? என்று கேட்டு அபர்ணாவிடம் வாக்குவாதம் செய்துள்ளான். நம் காதல் உண்மை என்றால் இப்பவே வா, நாம் ஓடிப்போயிடலாம் என அழைத்துள்ளார். ஆனால் அபர்ணா, அவருடன் செல்ல மறுத்துள்ளார். அங்கு வந்த அபர்ணாவின் தாய் ஹரிகரனை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன போது, ஆத்திரம் அடைந்த ஹரிகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபர்ணாவை சரமாரியாக குத்திக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

The problem with 'Friday arrests' and why the Madras HC wants the practice  to end | The News Minute

தப்பி ஓடிய ஹரிஹரனை காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காதலன் ஹரிஹரன் இன்று கைது செய்யப்பட்டார். தனக்கு கிடைக்காத இந்த பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தினால் குத்தி கொன்றதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Chella

Next Post

மீண்டும் தீவிரமடையும் போராட்டம்.. இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச தப்பியோட்டம்...

Sat Jul 9 , 2022
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடி உள்ளார்.. வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அண்மையில் பெட்ரோல், டீசல், கோதுமை […]
மனித உரிமை மீறல்..!! ராஜபக்சே சகோதர்களுக்கு தடை..!! கனடா அரசு அதிரடி நடவடிக்கை..!!

You May Like