காதலியின் அக்காவுடன் சேர்ந்து 10 சவரன் நகையை திருடிய காதலன்..!! சிக்கியது எப்படி..?

மதுரை மாவட்டம் மேலமாசி வீதி பகுதியில் பிரபல நகைக்கடையான பீமா ஜூவல்லர்ஸ் இயங்கி வருகிறது. இந்த கடையின் கீழ்த்தளத்தில் கடந்த 13ஆம் தேதி காலை 10 மணிக்கு வழக்கம் போல கடையை திறந்து, நகைகளை சரிபார்த்த போது மொத்த நகையில் 10 சவரன் குறைந்தது தெரியவந்தது. இதனால், பதறிப்போன ஊழியர்கள், மீண்டும் ஒருமுறை சோதனை செய்தனர். இதில், 10 சவரன் மதிப்பிலான செயின் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடையின் மேலாளர் கார்த்திக் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தார். அப்போது, நகைக்கடையின் கீழ்த்தளத்தில் கடையில் பணிபுரிந்து வந்த திருச்சியைச் சேர்ந்த அப்துல் பயாஸூக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவர் 10 சவரன் எடையிலான தங்க செயினை எடுத்து விட்டு அதற்கு பதிலாக கவரிங் செயினை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நகைக்கடை ஊழியரான அப்துல் பயாஸ் மற்றும் அவரது காதலியின் அக்காவான திவ்யா ஆகிய இருவரையும் கைது செய்து திருடப்பட்ட நகையை போலீசார், மீட்டனர். திருடப்பட்ட தங்க நகையை தனது காதலியின் அக்காவான திவ்யா என்பவரிடம் கொடுத்து அனுப்பியதும் விசாரணையில் அம்பலமானது. அப்துல் பயாஸ் கோயம்புத்தூரைச் சேந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், ஆண்டு தோறும் காதலர் தினத்திற்கு அவருக்கு கிஃப்ட் கொடுத்து வந்துள்ளார். இந்தாண்டு நகையை பரிசாக கொடுக்கலாம் என திட்டமிட்ட அவர், திவ்யாவிடம் கடையில் இருந்த 10 பவுன் செயினை போட்டோ எடுத்து அனுப்பி கவரிங் செயின் தயார் பண்ண சொல்லி செயினை இடம் மாற்றியுள்ளார். அதே சமயம் பிப்ரவரி 14ஆம் தேதி தாத்தா இறந்து விட்டதாக கூறி விட்டு கடைக்கு லீவு போட்டு விட்டு சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Chella

Next Post

வாட்ஸ்அப்-ல் இனி ஒரே நேரத்தில் 100 போட்டோக்கள், வீடியோக்களை அனுப்பலாம்.. புதிய அம்சம் அறிமுகம்...

Fri Feb 17 , 2023
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் […]
#BREAKING: மீண்டும் செயல்பட தொடங்கியது வாட்ஸ் அப்..!! நிம்மதி பெருமூச்சு விட்ட பயனர்கள்..!!

You May Like