மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கியதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதனால் குறுகிய காலத்திலேயே ஜியோ நிறுவனம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஈர்த்து தற்போது நாட்டின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக மாறி உள்ளது.
இருப்பினும், ஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் மலிவான திட்டங்களை வழங்கும் BSNL-க்கு மாறி வருகின்றனர். இந்த சூழலில் பல நிறுவனங்களும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது, வோடபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி ஜியோவுக்கு டஃப் கொடுத்துள்ளது. ஆம். திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு பிரியர்களுக்காக Vi Movies & TV என்று அழைக்கப்படும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.175 மட்டுமே. இந்த திட்டம் 15 க்கும் மேற்பட்ட பிரபலமான OTT தளங்களின் அணுகலை வழங்குகிறது.
Vi திரைப்படங்கள், TV ரீசார்ஜ் திட்டம்: Vi Movies மற்றும் TV செயலி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 17 OTT தளங்கள், 350 லைவ் டிவி சேனல்கள் மற்றும் சுருக்கமான உள்ளடக்க நூலகம் உட்பட பலவிதமான பொழுதுபோக்கு விருப்பங்களை வழங்குகிறது. ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களும் இந்த சேவையை பெற முடியும்.
திட்ட விவரங்கள்: SonyLIV, ZEE5, ManoramaMAX, FanCode மற்றும் Playflix உள்ளிட்ட பல OTT இயங்குதளங்களில் உங்களுக்கு பிடித்த படங்கள், வெப் சீரிஸ், நிகழ்ச்சிகளை பார்க்கலாம். அதுவும் ரூ. 175 என்ற விலையில் இந்த சலுகைகளை பெற முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் 10ஜிபி டேட்டாவையும் பெறலாம். இதன் மூலம் டேட்டா காலியாகிவிடும் என்று கவலைப்படாமல் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைத் தடையின்றி கண்டுகளிக்கலாம்.
ஜியோவின் திட்டத்தை விட சிறந்தது: Vi நிறுவனத்தின் சமீபத்திய இந்த சூப்பர் பேக் பல்வேறு வகையான பொழுதுபோக்கு விருப்பங்களை வழங்குவதன் மூலம் தனித்து நிற்கிறது. 15க்கும் மேற்பட்ட OTT தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜியோவில் ரூ.175 திட்டத்தில், 10 OTT ஆப்கள் மட்டுமே கிடைக்கும். எனவே ஜியோவின் ரூ.175 திட்டத்துடன் ஒப்பிடும் போது, Vi-ன் இந்த சுப்பர் பேக், சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. சினிமா மற்றும் பொழுதுபோக்கு ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மறுபுறம் ஜியோ பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
ரிலையன்ஸ் ஜியோவின் 749 திட்டம்: ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் விலை வெறும் 749 ரூபாய் மட்டுமே. 72 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் தினமும் 100 குறுஞ்செய்திகளை இலவசமாக அனுப்ப முடியும். நீங்கள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவராகவோ அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க விரும்புபவராக இருந்தால், ஜியோவின் இந்த திட்டம் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும். இது தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இந்த திட்டத்தின் காலம் முழுவதும் 144 ஜிபி வரை கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோவின் 999 திட்டம்: வெறும் 999 ரூபாய் என்ற விலையில் ஜியோ மற்றொரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 98 நாள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால், தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ் மற்றும் 2ஜிபி அளவிலான டேட்டா பேக்கேஜ் ஆகியவை அடங்கும். மேலும், அதிவேக 5G இணைய வேகத்தை கூடுதல் நன்மையாக பெற முடியும். JioTV, JioCloud மற்றும் JioCinema போன்ற ஜியோ சேவைகளுக்கான இலவச அணுகலும் கிடைக்கும். கூடுதல் கட்டணம் பற்றி கவலைப்படாமல் பயனர்கள் பொழுதுபோக்கு அம்சங்களை பெற முடியும்.
மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் உணவு வகைகள்..!! இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..