fbpx

பெற்றோர்களே எச்சரிக்கை!!! தங்க செயின் அணிந்த 10 வயது சிறுவன், சடலமாக மீட்பு..

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவை சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவருக்கு பாலசுந்தரி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களின் 2-வது மகன் 10 வயதான கருப்பசாமி, அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கருப்பசாமி கடந்த ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, நேற்று வழக்கம் போல் கார்த்திக் முருகனும், பாலசுந்தரியும் வேலைக்கு சென்று விட்டனர். இதனால், கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான். திடீரென கருப்பசாமி வீட்டிலிருந்து மாயமாகி உள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர் வீடுகளிலும், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளிலும் தேடியுள்ளனர்.

ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, தங்களின் மகனை காணவில்லை என்று, கருப்பசாமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான கருப்பசாமியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காணாமல் போன சிறுவன் கருப்பசாமி, இன்று பக்கத்து வீட்டு மாடியில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளான். இதையடுத்து, சிறுவன் கருப்பசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் பல மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிறுவன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் காணாமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, போலீசார் கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..

English Summary

10 year old boy was found dead in upstairs

Next Post

அடேங்கப்பா!!! சொகுசு கப்பலை சொந்தமாக வாங்கிய ஆல்யா மானசா..

Tue Dec 10 , 2024
alya manasa bought new boat house

You May Like