fbpx

பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.1000 கிடையாதா? குழப்பத்தில் மக்கள்!!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதுபற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படாததால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கியமான அம்சம் எதுவென்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்புதான். கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதையடுத்து மே 7ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் அறிக்கையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டது மகளிருக்கு பேருந்து கட்டணம் இலவசம் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மாதம் தோறும் வழங்கப்படும், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் மற்றும் நியாயவிலைக்கடகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகவும் உளுத்தம்பருப்பு கூடுதலாக வழங்கப்படும் என்ற மிக முக்கியமான அறிவிப்புகள்தான்.

முதல்வராக பொறுப்பேற்றதும் முதலில் கையெழுத்திட்டது மகளிருக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்ற திட்டம்தான். இத்திட்டம் மகளிரிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதில் ஆவின் பால் விலை குறைப்பு அறிவிப்பு முதல்வர் பொறுப்பேற்ற மாதத்திலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது. எனவே சமன்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.43லிருந்து ரூ.40 ஆக குறைக்கப்பட்டது. இதே போல அரை லிட்டர் பால் விலை ரூ.21.50 லிருந்து ரூ..1.50 குறைக்கப்பட்டு ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த மே 16ம் தேதி முதல் இந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு லிட்டர் பால் ரூ.68க்கு விற்பனை செய்யப்படும் என பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் வேட்டி சேலை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. வழக்கம் போல வழங்கப்படும் வேட்டி சேலைகள் பொங்களுக்கு 5 நாட்களுக்கு முன்பே மக்களைச் சென்றடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பொங்கலை ஒட்டி குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000 திட்டம் தொடங்கப்படும் என பேசப்பட்டு வந்தது. தற்போதுவரை இது குறித்த அறிவிப்புகள் வெளியாகாததால் குடும்பத் தலைவிகள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

Next Post

இந்த படமா? என கேட்ட ரசிகர்களை செம்ம படம்…!! என கூறவைத்த சில திரைப்படங்கள் பட்டியல் 2022..!!

Sat Nov 19 , 2022
2022ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் வருடத்தின் இறுதியில் சில படங்கள் ரசிகர்களை செம்ம படம் என கூற வைத்துள்ளது!! பெரிய அளவில் எடுக்கப்பட்ட பட்ஜெட் திரைப்படங்கள் எப்படியோ மாபெரும் ஹிட்டை கொடுத்து விடுகின்றன. காரணம் அந்த திரைப்படங்களுக்காக நடிகர்கள், நடிகைகளை வைத்து கொடுக்கப்படும் ப்ரோமோஷன் என கூறலாம். ஆனால் சில சிறிய படங்களை பொறுத்தவரையில் அந்தளவிற்கு ப்ரோமோஷன் இருக்காது. எனினும் கதை, […]

You May Like