fbpx

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வரும்..! -முன்னாள் நிதி அமைச்சர் கருத்து…

2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் ஆரம்பத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் பிறகு, காண்பதே அரிதாகிவிட்டது. இந்நிலையில் ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30, வரை, பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு பணத் தாள்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துளளது.

2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “நாங்கள் எதிர்பார்த்ததை போலவே ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற்று, செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகள் மக்கள் பயணப்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என்று கடந்த 2016ஆம் ஆண்டு நாங்கள் சொன்னது தற்போது நிரூபணமாகி உள்ளது.

பழைய 500 மாற்று 1,000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்த முட்டாள் தனமான முடிவை மூடி மறைக்கவே ரூ.2000 நோட்டு கட்டுக்கட்டாக இருந்தது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோல் மீண்டும் 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன. பணமதிப்பிழப்பு முழு வட்டத்திற்கு வந்துவிட்டது!

2000 ரூபாய் நோட்டு ஒருபோதும் ‘சுத்தமான’ நோட்டாக இருந்ததில்லை. இந்த நோட்டுகள் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படவில்லை. மக்கள் தங்கள் கறுப்புப் பணத்தை, தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது! என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Kathir

Next Post

ட்விட்டர் ப்ளு டிக் பயனரா நீங்கள்!... இனி 2 மணிநேரம்!... எலான் மஸ்க் கொடுத்த புதிய ஆஃபர்!

Sat May 20 , 2023
ட்விட்டர் ப்ளூ டிக் கணக்காளர்கள் 2 மணிநேரம் வரையில் ஓட கூடிய வீடியோ பதிவை, 8ஜிபி அளவு வரை அனைவரும் பார்க்கும் வகையில் பதிவேற்றி கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க், நிர்வாகம் மற்றும் ட்விட்டர் தளத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில் ட்விட்டர் பணியாளர்களை பெரிய அளவில் வேலையில் இருந்து நீக்கிய எலான் மஸ்க், […]

You May Like