நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்க தேசிய திறந்த வெளிப்பள்ளிகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் தொலைதூரக் கல்வி வழங்கப்படுவதோடு குறிப்பிட்ட வயது அடைந்தவர்கள் தனித்தேர்வர்களாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதலாம். அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் .
இந்நிலையில் தேசிய திறந்தவெளி பள்ளிகள் மூலம் வழங்கப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள் செல்லாது என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தேசிய திறந்தவெளி பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. இந்தத் திறந்தவெளி பள்ளிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் செல்லாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திறந்தவெளி பள்ளிகளின் மூலம் பெறப்படும் சான்றிதழ்கள் முறைப்படி பள்ளிகளில் கல்வி கற்று பெறப்படும் சான்றிதழ்களுக்கு இணையாகாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் திறந்த வெளி பள்ளிகளின் மூலம் பெறப்படும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு சான்றிதழ்கள் செல்லாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.