fbpx

விருதுநகர் அருகே ராஜபாளையத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட 11 பார்களுக்கு சீல்….! தொடரும் நடவடிக்கைகள்…..!

ராஜபாளையம் காவல் உட்கோட்டத்தில் ராஜபாளையம்-தென்காசி சாலையில் 3 பார்களுக்கும் ராஜபாளையம் நகரத்தில் 9 பார்களுக்கும், செட்டியார் பட்டி கிராமத்தில் 3 பார்களுக்கும், தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் 2 பார்களுக்கும் சேத்தூர் உட்பட 25 பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் கார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ப்ரீத்தி, வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரின் தலைமையில், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் கிராம நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் மற்றும் காவல்துறையினர் அனுமதி இன்றி செயல்படும் பார்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பெரும்பாலான பார்கள் மூடப்பட்டு இருந்தது 3 பார்கள் டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்பட்டு வந்தது. பூட்டி இருந்த 11 பார்களுக்கு அதிகாரிகள் சீர் வைத்தனர். டாஸ்மாக் கடை கட்டிடத்திலேயே செயல்படும் மூன்று பார்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இந்த அதிரடி நடவடிக்கையில் நேற்று இறங்கிய காவல்துறை, இன்றும் இந்த அதிரடி வேட்டையை தொடரும் என்று கூறப்படுகிறது ராஜபாளையம் தாலுகாவில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் அனைத்து பார்களுக்கும் சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Next Post

இருவிரல் பரிசோதனை செய்யப்பட்ட விவகாரம்…..! சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் விசாரணை…..!

Thu May 25 , 2023
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமணங்களை செய்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்த விசாரணையில் அந்த சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனைக்காக தடை செய்யப்பட்ட இருவிறல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சுமத்தினார். இந்த நிலையில், கடந்த 9ம் தேதி கடலூர் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் லட்சுமி வீரராகவன் மற்றும் உறுப்பினர்கள் இளங்கோவன், வினிதா முகுந்தன், செந்தில் உள்ளிட்ட ஐந்து பேர் […]

You May Like