தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் நடைபெற உள்ளது.
தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. தேர்வு மையத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களும் செல்போன் பயன்டுத்த கூடாது.
செல்போன்களை அணைத்து, தேர்வு மையத்திற்கான கட்டுப்பாட்டு அறையில் வைத்து விட்டு செல்ல வேண்டும். அதனையும் மீறி தேர்வு அறையில் செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் கட்டாயமாக சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேர்வு காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வின் போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுப்பட்டால் வழங்கப்படகூடிய தண்டனை விபரங்கள் அச்சிடப்பட்டு பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.