இன்றைய காலத்தில் யுபிஐ என்பது டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாக உருவெடுத்துள்ளது. ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே யுபிஐ பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் வசதி இருந்து நிலையில் தற்போது, Button போன் பயனர்கள் கூட இப்போது 123PAY என்ற யுபிஐ சிறப்பு சேவையை பயன்படுத்தலாம்.
UPI 123PAY ஆனது, பாதுகாப்பான மற்றும் வசதியான யுபிஐ கட்டணத்தை வழங்கும் அம்சத் தொலைபேசி பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட உடனடி கட்டண தீர்வாகும். IVR மூலம் பணம் செலுத்துதல், வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI சேவை மற்றும் QR குறியீட்டில் தானாக செலுத்த முடியும். அதாவது IVR மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக முன்பதிவு செய்து சேவைகளுக்கு பணம் செலுத்தலாம். இனி வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் சேவை இல்லாமலேயே பணத்தை மற்றொருவருக்கு அனுப்ப முடியும்.
பயனர்கள் தொலைபேசியில் *99# டயல் செய்வதன் மூலம் இந்த சேவையை பெறலாம், வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம், டெபிட் கார்டின் கடைசி ஆறு இலக்கு எண்கள் மற்றும் காலாவதி தேதி போன்ற தேவையான விவரங்களை வழங்க வேண்டும் மற்றும் பாதுகாப்பான UPI PIN செட் செய்து கொள்ளலாம்.
அமைப்பை முடித்ததும், UPI ஐடி செயல்படுத்தப்படும். இந்த தனித்துவமான அடையாளங்காட்டியானது, டிஜிட்டல் முறையில் பணத்தை அனுப்பவும் பெறவும் பயனர்களை அனுமதிக்கிறது. பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஆபத்தை நிர்வகிப்பதற்கும் UPI பேமெண்ட் பரிவர்த்தனை வரம்புகளைக் கொண்டுள்ளன. ஒரு நாள் பரிவர்த்தனை வரம்பு ரூ.1,00,000, மற்றும் ஒரு பரிவர்த்தனை வரம்பு ரூ.5,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.