தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைய உள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக இன்று வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு, இன்றுடன் நடைபெற்று முடிய உள்ளது. தேர்வினை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர்.
விடைத்தாள் திருத்தும் மையமாக அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு 7ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி விடைத்தாளை அனுபவம் வாய்ந்த முதன்மைத் தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள, முதுகலை ஆசிரியர்கள் திருத்தும் பணியை துவங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து, 11-ம் தேதி முதல் முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். விடைத்தாள் அனைத்தும் ஏப்ரல் 24-ம் தேதிக்குள் திருத்தி முடிக்கப்பட்டு, மே மாதம் 5-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.